50வது நாளில் அஜித் குமாரின் ‘துணிவு’.. உற்சாகத்தில் அதகளப்படுத்தும் ரசிகர்கள்.. - படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Glimpse இதோ..

வெற்றிகரமாக 50 வது நாளில் அஜித் குமாரின் துணிவு - Blockbuster Thunivu movie crossed 50 days | Galatta

இந்த ஆண்டு துவக்கத்திலே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் கோலாகல கொண்டாட்டங்களுடன் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான திரைப்படம் ‘துணிவு . பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்த இயக்குனர் எச் வினோத் மற்றும் நடிகர் அஜித் குமார் இணைந்து நடித்து அட்டகாசமான வங்கி கொள்ளையை மையப்படுத்தி அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை கொடுத்தனர்.

தமிழகமெங்கும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம்  மிகப்பெரிய ஆரவாரத்துடன் இன்று வரை பல இடங்களில் ஓடிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தில் நடிகர் அஜித்  உடன் சமுத்திரகனி, மஞ்சுவாரியர், ராஜதந்திரம் வீரா, ஜான் கொக்கன், ஜி எம் சுந்தர்,  மகாநதி சங்கர்  உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.மேலும்   படத்த்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் நீரவ். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய ஜிப்ரான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமோகமாக வரவேற்பினை பெற்று வருகிறது

மேலும் இப்படம் கடந்த பிப்ரவரி 8 ம் தேதி திரையரங்கை தாண்டி பிரபல ஒடிடி தளமான நெட்ப்ளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகி மிகபெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் துணிவு திரைப்படம் உலக நாடுகள் கவனத்தை பெற்று சாதனை படைத்து வருகிறது. ஒடிடியில் வெளியானாலும் இன்னாமும் பல திரையரங்குகளில் துணிவு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கின்றது. உலகெங்கிலும் பல கோடிகளை குவித்து வரும் துணிவு திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படத் தயாரிப்பாளர் போனி கபூர் துணிவு படத்தின்  50 நாள் கொண்டாட்டங்களையொட்டி அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து துணிவு படத்தின் சிறப்பு போஸ்டர் தற்போது ரசிகர்களால் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான இந்த துணிவு படம் தான் உலக நாடுகளில் பல சாதனைகளை அவரது திரைப்பயணத்தில் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Thunivu50thDay #AjithKumar #HVinoth pic.twitter.com/abBz3DtKt8

— Boney Kapoor (@BoneyKapoor) March 1, 2023

100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

“அது அவருடைய உழைப்பு..” தளபதி விஜய் குறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“அது அவருடைய உழைப்பு..” தளபதி விஜய் குறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் – வைரலாகும் வீடியோ இதோ..

களைகட்டும் மார்ச் மாதம்.. வரிசையாக வெளியாகும் அட்டகாசமான திரைப்படங்கள் - பட்டியல் இதோ..
சினிமா ஸ்பெஷல்ஸ்

களைகட்டும் மார்ச் மாதம்.. வரிசையாக வெளியாகும் அட்டகாசமான திரைப்படங்கள் - பட்டியல் இதோ..