தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஜீவா மற்றும் சிவா இணைந்து நடித்திருக்கும் கோல்மால் திரைப்படம் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் சுந்தர்சி ஜீவா ஜெய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் காஃபி வித் காதல். பிரபல தொகுப்பாளினி DD-திவ்யதர்ஷினி, அமிர்தா ஐயர், மாளவிகா ஷர்மா, ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் காஃபி வித் காதல் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதனிடையே இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் திரைப்படம் வரலாறு முக்கியம். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் R.B.சௌத்ரி தயாரிக்கும் ரொமான்டிக் காமெடி திரைப்படமான வரலாறு முக்கியம் திரைப்படத்தில் காஷ்மிரா பரதேசி மற்றும் பிரக்யா நக்ரா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ள வரலாறு முக்கியம் படத்துக்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் முதல் பாடலாக “பொத்தி பொத்தி வளத்த புள்ள மேகல” எனும் பாடல் வருகிற ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.