தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் அசோக்செல்வன் நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு(2022) வெளிவந்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை மற்றும் ஹாஸ்டல் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. தொடர்ந்து அசோக்செல்வன் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முன்னதாக தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் நித்தம் ஒரு வானம் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே அறிமுக இயக்குனர் சந்தீப் சியாம் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள வேழம் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, ஜனனி மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

K 4 KREATIONS தயாரிப்பில் உருவாகியிருக்கும் வேழம் திரைப்படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்ய, ஜானு சந்தர் இசையமைத்துள்ளார். வேழம் திரைப்பட வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.  இந்நிலையில் வேழம் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியானது. விறுவிறுப்பான வேழம் படத்தின் ட்ரைலர் இதோ…