ஜெயிலர் முதல் மாவீரன் வரை.. இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. – அட்டகாசமான பட்டியல் இதோ..

இந்த வாரம் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படங்கள் இதோ - Here is the list of This Week OTT and theatre releases | Galatta

ரசிகர்களுக்கு கலக்கலான விருந்தாக இந்த வாரம் அமையவுள்ளது.‌. தரமான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் திரைப்படம் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் படம் வரை ரசிகர்களின் நேரத்தை செலவிட ஒடிடி மற்றும் திரையரங்குகளில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இந்த வாரம் வெளியாகவுள்ளது. இது குறித்து சிறப்பு கட்டுரை இதோ..

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் :

ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட் - 10)  வெளியான திரைப்படம் ஜெயிலர் ஒட்டு மொத்த திரையுலக ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் இப்படம் தற்போது வெற்றிகரமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon

போலா ஷங்கர்

அஜித் குமார் நடிப்பில் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற வேதாளம் படத்தின் ரீமேக்கான போலா ஷங்கர் சிரஞ்சீவி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா போன்ற பகுதிகளில் ரசிகர்களின் கொண்டாட்டங்களுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.   

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon

அதே போல் பாலிவுட் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் காதர் 2, ஓஎம்ஜி 2 திரையரங்குகளில் வெளியாக உள்ளது

ஒடிடி – ல் வெளியாகும் திரைப்படங்கள்

மாவீரன்

சிவகர்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பில் திரையரங்குகளில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றி பெற்ற மாவீரன் திரைப்படம் தற்போது அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் இன்று வெளியாகியுள்ளது.

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon

ஆதிபுருஷ்

பிரம்மாண்ட பொருட்செலவில் பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி உலகளவில் ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இதிகாச கதையில் உருவான இப்படம் தற்போது அமேசான் பிரைமில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon

போர் தொழில்

அசோக் செல்வன் – சரத் குமார் நடிப்பில் அதிரடியான கிரைம் திரில்லர் கதைகளத்தில் உருவான போர் தொழில் திரைப்படம் தற்போது சோனி லிவ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon

வான் மூன்று

96 புகழ் ஆதித்யா பாஸ்கர் மற்றும் அம்மு அபிராமி நடிப்பில் காதல் கதைகளத்தில் உருவான  வான் மூன்று தொடர் இன்று முதல் ஆஹா தமிழில் ஒளிப்பரப்பாகிறது.

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon

நெய்மார்

மலையாள ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நெய்மார் திரைப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிறது.

actor vishal opens up about marriage rumours with actress lakshmi menon