“இது அஜித் எடுத்த தவறான முடிவு” ரசிகரின் பதிவிற்கு பதிலடி கொடுத்த நடிகை காயத்ரி.. வைரல் பதிவு உள்ளே..

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் குறித்து நடிகை காயத்ரி பகிர்ந்த தகவல் - Actress gayathrie about ajith kumar nerkonda parvai movie | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமான நடிகராகவும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாகவும் இருந்து வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான துணிவு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்ற பெருமையை பெற்றது. மாபெரும் ஹிட்டை தொடர்ந்து தற்போது அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ என்ற நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஆக்ஷன் அதிரடி கதைக்களத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அஜித் படம் என்றாலே தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருவது வழக்கம் அதன்படி கடந்த 2019 ல் அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக கொண்டாடப் பட்ட திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் நேர்கொண்ட பார்வை படத்தை விமர்சன ரீதியாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன்பு அஜித் – சிவா கூட்டணியில் விசுவாசம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. மிகப்பெரிய வெற்றிக்கு பின் இந்தி திரைப்படத்தை ரீமேக் செய்தது பலரால் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. இருந்தும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப் பட்டது.

தற்போது நேர்கொண்ட பார்வை 4 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து இப்படம் குறித்து ரசிகர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். அதில் ஒரு ரசிகர்,

அஜித் குமார் அவருடைய திரைபயணத்தில் எடுத்த தவறான முடிவு நேர்கொண்ட பார்வை.. அதுவும் விஸ்வாசம் போன்ற பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படத்திற்கு பின் A Centre ரசிகர்களுக்கான இப்படம் அவரது குடும்ப ரசிகர் வட்டாரத்தை சுருக்கியது. மேலும் படத்தில் வேண்டுமென்றே திணிக்கப்பட்ட கமர்ஷியல் விஷயங்களும் தோல்வியை அடைந்தது. என்று அவரது விமர்சனத்தை பகிர்ந்திருந்தார்.

#AjithKumar's #Nerkondapaarvai completes 4 yrs! One of #AK's wrong decisions in his career to act in a remake & that too in a pure A centered film after a Family Blockbuster Viswasam, thereby reducing his family audience base. Those forced commercial elements didn't work too! pic.twitter.com/xG0PdfscY5

— VCD (@VCDtweets) August 8, 2023

இந்நிலையில் அவருடைய பதிவை, நடிகை காயத்ரி பகிர்ந்து அதனுடன் “ஒரு படத்தின் வெற்றி என்பது பாக்ஸ் ஆபிஸ் என்பதை மட்டுமே அளவு கோலாக வைக்க முடியாது. அது சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியான போது சமூகத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியது. அந்த தாக்கம் குறைய இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்..” என்று குறிப்பிட்டு வெளியிட்டார். இதனையடுத்து ரசிகர்களால் அப்பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

I think the measuring unit for success needs to go beyond the box office and should take into account the social impact too. #Nerkondapaarvai and #AjithKumar opened up discussions about consent in circles where it might've taken years, maybe even decades for it to trickle down.. https://t.co/4XzxH4sFV5

— Gayathrie (@SGayathrie) August 9, 2023

நடிகை காயத்ரி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம் தொடங்கி சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ வரை படத்திற்கு படம் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.