லட்சுமி மேனன் உடன் திருமணமா..? – வதந்திகளுக்கு விளக்கமளித்த நடிகர் விஷால்.. – விவரம் உள்ளே..

லக்ஷ்மி மேனன் உடன் திருமணம் குறித்து நடிகர் விஷால் கருத்து - Actor Vishal about Marriage with actress Lakshmi menon | Galatta

தென்னிந்தியாவின் குறிப்பிடதக்க நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். அறிமுகமான போதிலிருந்தே இன்று வரை குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் திரைப்படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் நடிகர் விஷால். சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். அதன்படி இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் எதிர்பார்த்த் வரவேற்பை பெறவில்லை. தற்போது இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் பீரியட் கதைகளத்தில் Sci -  Fi திரைப்படமான மார்க் ஆண்டனி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஷால் உடன் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா சுனில் போன்ற  முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.  ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும்  மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மார்க் ஆண்டனி படத்தையடுத்து இயக்குனர் ஹரி உடன் இரண்டாவது முறை கூட்டணி அமைக்கவுள்ளார் நடிகர் விஷால்.

திரைத்துறையில் நடிகராக மட்டுமல்லாமல் நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் இயங்கி வரும் விஷாலின் திருமணம் குறித்து சமீப காலமாக வதந்தி ஒன்று பரவி வருகிறது.

அதன்படி பிரபல நடிகை லஷ்மி மேனனை விஷால் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் விரைவில் இதுகுறித்து தகவல் வெளியாகும் என்றும் வதந்தி பரவியது. சமீப காலமாக இந்த வதந்தி வேகமாக பரவ இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது விஷால் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் இதுகுறித்து பகிர்ந்த பதிவில், என்னை பற்றிய பொய்யான செய்திகளுக்கும் வதந்திகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. அது பயனற்றது என்பது எனக்கு தெரியும்.

ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என பரவும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அது ஆதரமற்ற தகவல். நான் இதற்கு விளக்கமளிப்பதற்கு காரணம், லஷ்மி மேனன் ஒரு நடிகை என்பதை தாண்டி அவர் ஒரு பெண் என்பதால் தான்.இதுபோன்ற வதந்திகளை பரப்புவதனால் நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைப்பதோடு மட்டுமின்றி அடையாளத்தையும் கெடுக்கிறீர்கள். நான் யாரை கல்யாணம் பண்ண போகிறேன், எந்த வருடம், என்ன தேதி, நேரம் என்பது பெர்முடா முக்கோணம் அல்ல ஆராய்வதற்கு..  சரியான நேரம் வரும்போது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று விளக்கமளித்துள்ளார் நடிகர் விஷால். தற்போது நடிகர் விஷால் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Usually I don’t respond to any fake news or rumors about me coz I feel it’s useless. But now since the rumour about my marriage with Laksmi Menon is doing the rounds, I point blankly deny this and it’s absolutely not true and baseless.

The reason behind my response is only…

— Vishal (@VishalKOfficial) August 11, 2023

நடிகை விஷால் ஆரம்ப காலத்தில் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களில் விஷாலுடன் சேர்ந்து நடித்திருந்தார். அப்போதிலிருந்தே இருவர் குறித்த வதந்திகள் பரவி வந்தது என்பது குறிப்படத்தக்கது.