அலப்பறை கிளப்பும் கூகுள் நிறுவனம்..! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் குறித்து பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை கொண்டாடும் கூகுள் நிறுவனம் விவரம் உள்ளே - Google india welcomes superstar rajinikanth Jailer | Galatta

நீண்ட நாள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன் லால், விநாயகன், யோகி பாபு, சிவராஜ் குமார், ஜாக்கி ஷராப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இப்படத்தை இயக்கியுள்ளார்  இயக்குனர் நெல்சன் திலீப் குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் இப்படதிற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் குறிப்பாக காவலா, ஹுக்கும் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து டிரெண்டாகி வருகிறது.

ஒட்டு மொத்த திரையுலகினர், ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் இன்று ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதையடுத்து திரை பிரபலங்கள் , ரசிகர்கள் தங்கள் உற்சாகத்துடன் ஜெயிலர் பட விமர்சனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

 

#Jailer Speechless...... Goosebumps ......
Thalaivaaaa 🔥🔥🔥 on fire in every frame..@Nelsondilpkumar extraordinary writing & Loved the Humour all thro 👌👌@anirudhofficial Special blast 💥💥@sunpictures cast n crew...Hat's off for Theri Massss Thalaivar Padam 🙏🏼🙏🏼❤️ pic.twitter.com/Uj837KabtA

— karthik subbaraj (@karthiksubbaraj) August 10, 2023

முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில்   ஜெயிலர் படக்குழுவினரை அவரது ஸ்டைலில் வாழ்த்தினார். அதன்பின் லியோ பட வசன கர்த்தாவான இயக்குனர் ரத்தின குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் ஆரவார சத்தத்தை தனது ஐ வாட்ச் பதிவுடன் பகிர்ந்திருந்தார்.

 

#JAILER. Refreshing to see Thalaivar @rajinikanth sir Swag especially in INTERVAL & CLIMAX🔥. Whatte performer he is💥. His walk & the way he plays with Cigar itself is enough for the Ticket price 😍🥳. Congrats @Nelsondilpkumar bro. It's not easy to be you 💪👏. Amazing… pic.twitter.com/SPLRkHu9BU

— Rathna kumar (@MrRathna) August 10, 2023

இது போன்ற நூதன கொண்டாட்டத்தையடுத்து இந்நிலையில் கூகுள் நிருவனம் தனது சமூக வலை பக்கத்தில் ஜெயிலர் படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளது. கூகுள் நிறுவனம் பகிர்ந்த பதிவில்,

“தலைவர் நிரந்தரம்..நீண்ட நாள் காத்திருப்பு இன்று நிறைவடைந்தது” என்று குறிப்பிட்டு அண்ணாத்த திரைப்படம் வெளியாகி 644 நாள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் வெளியாகியுள்ளது என பதிவிட்டுள்ளது. இதையடுத்து இணையத்தில் கூகுள் நிறுவனத்தின் பதிவு மிகப்பெரிய அளவு வைரலாகி வருகிறது.

முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. என்றாலும் அதன் அடுத்தபடியாக உருவான ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. அதன்படி இப்படம் இன்று வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

sivakarthikeyan blockbuster hit maaveeran box office collection report out now