சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படம் குறித்து ஷாருக் கான்..! – இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே..

ஜெயிலர் படம் குறித்து ஷாருக் கான் பகிர்ந்த தகவல் வைரல் பதிவு உள்ளே -  Shah rukh khan about superstar rajinikanth jailer movie | Galatta

இந்திய ரசிகர்களால் பல ஆண்டுகளாக கொண்டாடப்படும் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் ஷாருக் கான். தொடர்ந்து ரசிகர்களை தன் படங்கள் மூலம் மகிழ்வித்து பாலிவுட்டின் கிங் கானாகவும் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாகவும் வலம் வருகிறார் நடிகர் ஷாருக் கான். இவரது நடிப்பில் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த பதான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்தி திரையுலகில் இமாலய வெற்றியை பெற்றது. இப்படத்தையடுத்து தற்போது ஷாருக் கான் இயக்குனர் அட்லி முதல் முறையாக இந்தியில் அறிமுகமாகும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மிரட்டலான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக் கான் உடன் இணைந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க மேலும் அதிரடியான வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, சோனியா மல்ஹோத்ரா, பிரியா மணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதையடுத்து படத்தில் சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

ரெட் சில்லி தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ராக்ஸ்டார் அனிருத். இவரது இசையில் முன்னதாக வெளியான பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்று தற்போது இணையத்தில் டிரெண்ட்டிங்கில் இருந்து வருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 7ம் தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் படத்தின் நாயகன் ஷாருள் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் ASK SRK என்ற ஹேஷ்டேக்குடன் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.  அதில் ஜவான் திரைப்படம் குறித்து பல கேள்விகள் ரசிகர்களால் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த கேள்வியில், “நீங்கள் ஜெயிலர் படம் பார்ப்பீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஷாருக் கான் “கண்டிப்பாக, ஐ லவ் ரஜினி சார்..மாஸ்...! அவர் ஜவான் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து எங்களை சந்தித்து ஆசிர்வதித்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களால் அப்பதிவு வைரலாகி வருகிறது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷராப், விநாயகன், சுனில், யோகி பாபு, வசந்த் ரவி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுடன் இன்று திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் படத்தை நாடு முழுவதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.  

Of course I love Rajni sir….Maassss!! He had come on Jawan set and blessed us too. #Jawan https://t.co/cKaqMlR8c4

— Shah Rukh Khan (@iamsrk) August 10, 2023