இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த பல படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.அடுத்ததாக தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.

இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.ஹீரோவானாலும் தொடர்ந்து வேறு படங்களுக்கு இசையமைப்பதையும் தொடர்ந்து வந்தார்.

இவர் நடித்த சிவகுமாரின் சபதம்,அன்பறிவு படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை அடுத்து இவர் மரகத நாணயம் பட இயக்குனர் ARK சரவண் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.இந்த படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக அடுத்து நடைபெறவுள்ளன எனவும் ஹிப்ஹாப் தமிழா தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.