வாரிசு படத்தில் நடிப்பதை உறுதி செய்த முக்கிய நடிகை ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | October 26, 2022 16:37 PM IST

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்திகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் வாரிசு.
தோழா,மஹரிஷி போன்ற வெற்றி படங்களை இயக்கிய வம்சி பைடிபைலி இந்த படத்தினை இயக்குகிறார்.ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் இந்த படத்தினை தயாரிக்கின்றனர்.
தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் சரத்குமார்,பிரபு,பிரகாஷ்ராஜ்,ஜெயசுதா,தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த்,ஷாம்,சங்கீதா,யோகி பாபு,சம்யுக்தா ஷண்முகம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் 2023 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியாகி செம வைரலாகி வந்தன.படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் சில ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தன.இதனை அடுத்து குஷ்பூ தான் படத்தில் நடித்துள்ளேன் என்பதை உறுதிசெய்துள்ளார்.சில நாட்களுக்கு முன் இவர் படத்தில் நடிக்கவில்லை என கூறியது குறிப்பிடத்தக்கது,அது படக்குழுவினர் அறிவிக்கும் வரை தெரிவிக்கவேண்டும் என்பதற்காக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
Extremely happy to be part of this family.
— KhushbuSundar (@khushsundar) October 26, 2022
( Was waiting for the official news from the production before me saying anything about it. ) @actorvijay @directorvamshi #DilRaju #Varisu #Varisudu #Vijay66 pic.twitter.com/BcfuWgFTDq