தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்சியல் இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி.தனது ஜாலியான படங்கள் மூலம் பல ரசிகர்களை பெற்றுள்ளார் சுந்தர் சி.இவர் இயக்கிய அரண்மனை 3 திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடம நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து இவர் இயக்கும் படம் காபி வித் காதல்.ரொமான்டிக் காமெடி படமாக தயாராகி வரும் இந்த படத்தினை குஷ்பூவின் அவ்னி சினி மேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஜீவா,ஜெய்,ஸ்ரீகாந்த்,அம்ரிதா ஐயர்,மாளவிகா ஷர்மா,சம்யுக்தா ஷண்முகம்,ரைசா,ஐஸ்வர்யா தத்தா,தொகுப்பாளினி DD திவ்யதர்ஷினி,ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்