சியான் விக்ரமின் ஸ்டைலிஷ் ஆக்ஷன் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.. – ரிலீஸ், பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

துருவ நட்சத்திரம் பாடல் குறித்த அப்டேட்டை பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ் - Harris Jayaraj about dhruva natchathiram 2nd single update | Galatta

அசாதாரண நடிப்பின் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சியான் விக்ரம்.  இயக்குனர் மணிரத்தினம் அவர்களின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நேர்த்தியாக மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அணைத்து ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று கொண்டாடப் பட்டார். பொன்னியின் செல்வன் 1,2 படங்களை தொடர்ந்து தற்போது சியான் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ‘தங்கலான்’. இயக்குனர் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் இப்படம் 1800 காலக் கட்டத்தின் கேஜிஎஒ தங்க வயல் கதைகளத்தில் உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் தயாராகுகும் தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது முடிந்துள்ளது.

இதனிடையே சியான் விக்ரம் நடிப்பில் பக்கா ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி நீண்ட நாள் ரிலீஸுக்கு காத்திருக்கும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’ இயக்குனர் கௌதம் வாசு தேவ் மேனன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்க படத்தின் கதாநாயாகிகளாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ரிது  வர்மா நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒன்றாக என்டர்டைன்மென்ட், கொண்டாடுவோம் என்டர்டைன்மென்ட் & எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு தயாரான இப்படம் பல்வேறு சிக்கல்களினால் வெளியீடு தள்ளி போனாலும் துருவ நட்சத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே குறையாமல் நாளுக்கு நாள் படம் குறித்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து கேட்டு வருகின்றனர்.  இந்நிலையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது,

சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் ரீரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனை படக்குழுவினருடன் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த விழாவில் பத்திரிக்கையாளரை சந்தித்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது அடுத்த படம் குறித்தும் துருவ நட்சத்திரம் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த தகவலில் துருவ நட்சத்திரத்தின் இசை வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் இரண்டாவது பாடல் அடுத்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். படத்தின் ரிலீஸ் தேதி இந்த மாதம் இறுதியில் படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் பகிர்ந்த தகவல் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

 

'கொண்டாடி கொளுத்த ரெடியாகிகோங்க நண்பா!'- லியோ ஷூட்டிங்கை முடித்த தளபதி விஜய்... வைரலாகும் பக்கா மாஸான புகைப்படங்கள் இதோ!
சினிமா

'கொண்டாடி கொளுத்த ரெடியாகிகோங்க நண்பா!'- லியோ ஷூட்டிங்கை முடித்த தளபதி விஜய்... வைரலாகும் பக்கா மாஸான புகைப்படங்கள் இதோ!

இசையமைப்பாளராக 100வது படம்..  பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜிவி பிரகாஷ் - வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

இசையமைப்பாளராக 100வது படம்.. பிரபல இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஜிவி பிரகாஷ் - வைரல் வீடியோ உள்ளே..

‘லியோ’ படத்திற்கு பின் முன்னணி நடிகருடன் நடிக்கும் நடிகை த்ரிஷா.! - அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..
சினிமா

‘லியோ’ படத்திற்கு பின் முன்னணி நடிகருடன் நடிக்கும் நடிகை த்ரிஷா.! - அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..