‘லியோ’ படத்திற்கு பின் முன்னணி நடிகருடன் நடிக்கும் நடிகை த்ரிஷா.! - அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட படக்குழு..

மலையாளத்தில் களமிறங்கும் திரிஷா உற்சாகத்தில் ரசிகர்கள் - After Leo Trisha next with tovino thomas movie announcement goes viral | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர். முதல் படத்திலே ரசிகர்களின் வரவேற்பை பெற்று பல ஹிட் திரைபடங்களில் நடித்து வந்தார். அதில் கில்லி, திருப்பாச்சி, இவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்து. ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த திரிஷா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி முன்னணி நடிகையாக வளர்ந்தார். அதை தொடர்ந்து  தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல முக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். இவர் நடிப்பில் முன்னதாக வெளியான ராங்கி, பொன்னியின் செல்வன் 1, 2 ஆகிய திரைப்படங்கள் திரிஷாவின் மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த திரிஷா இந்தியா முழுவதும் அதிகம் பேசப்பட்டார். தற்போது நடிகை த்ரிஷா இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதை தொடர்ந்து இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் ‘தி ரோடு’ என்ற படத்திலும் மலையாளத்தில் மோகன் லால் நடித்து வரும் ‘ராம் – பார்ட் 1’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது திரிஷாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சரியான கதையை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களிடையே கவனம் பெற்று வரும் திரிஷா தற்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த 2020 ல் மலையாள திரையுலகில் அட்டகாசமான திரில்லர் திரைப்படமாக வெளியான ‘ஃபாரன்சிக்’ படத்திற்கு பின்  இயக்குனர்கள் அனாஸ் கான் – அகில் பால் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகவுள்ள ‘ஐடன்ட்டி’ என்ற படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Totally pumped to associate with this squad in a high octane action entertainer🤩🙏🏻@ttovino #akhilpaul #anaskhan #identity pic.twitter.com/4qb8Qbksbh

— Trish (@trishtrashers) July 8, 2023

முன்னதாக திரிஷா மலையாளத்தில் நிவின் பாலியுடன் ‘ஹே ஜூட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து மோகன் லால் உடன் ‘ராம் 1’ படத்தில் நடித்து வருகிறார். இந்த ஐடன்டி திரைப்படம் த்ரிஷாவிற்கு மலையாளத்தில் மூன்றாவது திரைப்படம் என்பது குறிப்பிடதக்கது.   

 

View this post on Instagram

A post shared by Tovino⚡️Thomas (@tovinothomas)

சினிமா

"ரஜினி சாருடன் படம் பண்ண பயமா இருக்கு.." கௌதம் மேனன் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் - Exclusive Interview இதோ..

சினிமா

"தளபதி 68 தான் விஜயின் கடைசி படமா?"- சோசியல் மீடியாவில் பரவும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஜெயனின் பதில் இதோ!

அமெரிக்காவின் முக்கிய விழாவில் முதல் இந்திய திரைப்படம்..! பிரபாஸ், கமல் ஹாசன் நடிக்கும் ‘Project K’ படக்குழுவின் அட்டகாசமான அறிவிப்பு..
சினிமா

அமெரிக்காவின் முக்கிய விழாவில் முதல் இந்திய திரைப்படம்..! பிரபாஸ், கமல் ஹாசன் நடிக்கும் ‘Project K’ படக்குழுவின் அட்டகாசமான அறிவிப்பு..