ஃபேவரட் இசையமைப்பாளராகவும் முன்னணி கதாநாயகனாகவும் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் விஜய் ஆண்டனி அடுத்ததாக தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வள்ளி மயில் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தொடர்ந்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

முன்னதாக விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், அக்னிசிறகுகள் & காக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகிவரும் கொலை மற்றும் தமிழ் படம் பட இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் ரத்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான S.D.விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் மழை பிடிக்காத மனிதன். சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், முரளி சர்மா, தனஞ்ஜெயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

இன்ஃபினிட்டி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்க பிரவீன் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களுக்கான படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

எனவே விரைவில் டீசர் வெளியாகும் எனவும் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி கதாபாத்திரங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்யும் வகையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

. @vijayantony - @vijaymilton 's#MazhaiPidikkathaManithan #மழைபிடிக்காதமனிதன்

Shooting wrapped up today with lead cast. Teaser releasing soon 🏆@FvInfiniti @realsarathkumar @akash_megha @bKamalBohra @dhananjayang @pradeepfab @panbohra @DoneChannel1 @ProRekha @CtcMediaboy pic.twitter.com/UfEGZvj4f5

— CtcMediaboy (@CtcMediaboy) June 15, 2022