சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2007-ல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம் சிவாஜி.இந்த படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன.உலகம் முழுக்க இந்த படம் பெரிய வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு அழைத்து சென்றது.

சூப்பர்ஸ்டாரின் ஸ்டைல் மற்றும் மாஸுடன் ஷங்கரின் கிளாஸ் இணைந்துகொள்ள படம் பலரது Favourite ஆக ஆனது.இவர்களுக்கு உறுதுணையாக இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் மிரட்டினார்,ஷ்ரியா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.சுமன்,மணிவண்ணன்,விவேக்,வடிவுக்கரசி என பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

படம் பெரிய வரவேற்பை பெற்று இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக நிலைத்து நின்று வருகிறது.அப்படி மறக்கமுடியாத வெற்றியை தந்த இயக்குனர் ஷங்கரை இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

அடுத்ததாக இதுகுறித்த ஆடியோ பதிவு ஒன்றையும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த பகிர்ந்துள்ளார்.பிரம்மாண்ட வெற்றி பெற்ற சிவாஜி வெளியாகி 15 ஆண்டுகள் ஆகியுள்ளது.படத்தில் வேலை பார்த்த அத்தனை பேருக்கும் படத்தினை பெரிய வெற்றி அடைய செய்த ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.இந்த ஆடியோ பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்