சூர்யா நடிப்பில் இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் 2020 தீபாவளியை முன்னிட்டு அமேசான் ப்ரைம்மில் வெளியானது.

மோகன் பாபு,கருணாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படம் பல திரைப்பட விழாக்களில் பல சிறப்பு அங்கீகாரங்களை பெற்று சாதனை படைத்து வருகிறது.பலரும் இந்த படத்தினை திரையரங்குகளில் மிஸ் செய்துவிட்டோமே என்று பெரிதும் ஏங்கி வந்தனர்.இந்த படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இந்த படம் அடுத்து ஹிந்தியில் ரீமேக் ஆகிறது.இந்த படத்தினையும் சூர்யா CapeOfGoodFilms மற்றும் Abundantia என்டேர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரிக்கிறார்.

அக்ஷய் குமார் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.ராதிகா மதன் ஹீரோயினாக நடிக்கிறார்.சுதா கொங்கரா படத்தினை இயக்க ஜீ வி பிரகாஷ் இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதை நடிகர் சூர்யா ஒரு புகைப்படத்துடன் உறுதி செய்துள்ளார்.சமீபத்தில் விக்ரம் படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் வந்தது பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது