ரிலீஸுக்கு ரெடியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பக்கா மாஸ் ஜெயிலர்... அதிரடியாக வந்த சென்சார் அறிக்கை இதோ!

ரஜினிகாந்தின் ஜெயிலர் பட சென்சார் அறிக்கை வெளியானது,superstar rajinikanth in jailer movie censored with ua | Galatta

முதல்முறையாக இயக்குனர் நெல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் சென்சார் அறிக்கை வெளியானது. என்றென்றும் மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக விளங்கும் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளாக தனது ஸ்டைலான நடிப்பால் தொடர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் மொய்தின் பாய் எனும் மிக முக்கிய கௌரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் படம் என்பதால் இத்திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் அவர்களும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைப்பயணத்தில் 170வது திரைப்படமாக லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய தலைவர் 170 திரைப்படத்தை ஜெய் பீம் படத்தின் இயக்குனர் TJ.ஞானவேல் அவர்கள் இயக்கவுள்ளார்.ஈ அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய தலைவர் 171 அதிரடி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக தெரிகிறது. சமீபத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இடம் இது குறித்து கேட்டபோது தயாரிப்பு தரப்பிலிருந்து தான் அதிகாரப்பூர்வமாக சொல்ல வேண்டும் என அவர் தெரிவித்திருப்பதால் கிட்டத்தட்ட இந்த கூட்டணி இணைவது உறுதி என ரசிகர்கள் உற்சாகமடைந்து இருக்கின்றனர். 

முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் முதல்முறையாக ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும்,ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர். இதுபோக மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ஜெயிலர் திரைப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவில், நிர்மல் படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்ததது. வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ஜெயிலர் படம்  ரிலீஸாகவுள்ளது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற சூலை 28ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.  இயக்குனர் நெல்சனின் தனி ஸ்டைலில் டார்க் காமெடி மற்றும் அதிரடி ஆக்சன் கலந்த பக்கா எண்டர்டெய்னர் படமாக ஜெயிலர் திரைப்படம் இருக்கும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்திற்கு சென்சாரில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…
 

#Jailer certified U/A. Get ready to witness the rage of Muthuvel Pandian from Aug 10th! 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu @iamvasanthravi #Jailer pic.twitter.com/2JoKrvN20G

— Sun Pictures (@sunpictures) July 27, 2023

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!
சினிமா

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!
சினிமா

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த சூர்யாவின் அதிரடியான கங்குவா பட ஸ்பெஷல் பரிசு... GLIMPSE of கங்குவா ஆடியோ பாடல் இதோ!