இந்திய திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் ஃபகத் பாசில் கடைசியாக தமிழில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து மலையாளத்தில் ஃபகத் பாசில் நடித்த மலையன்குஞ்சு திரைப்படம் சமீபத்தில் வெளியானது.

இதனையடுத்து தமிழில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகைப்புயல் வடிவேலு ஆகியோருடன் இணைந்து மாமன்னன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் பாசில், அடுத்ததாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா 2-The Rule திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த வரிசையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஃபகத் பாசில் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் டாப் கியர். சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் 96-வது திரைப்படமாக தயாரிப்பாளர் RB.சௌத்ரி தயாரிக்கும் ஃபகத் பாசிலின் டாப் கியர் திரைப்படத்தை இயக்குனர் சுதீஷ் ஷங்கர் இயக்குகிறார்

இன்று செப்டம்பர் 9-ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஃபகத் பாசிலின் டாப் கியர் (மலையாளத்தில் ஹனுமன் கியர்) திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாளை செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் டாப் கியர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

. @SuperGoodFilms_ Production No 96
Starring Powerhouse Talent #FahadhFaasil all set to kick-start shoot.#HanumanGear #TopGear@JithanRamesh @JiivaOfficial @chinnasamy73 #SudheeshSankar@RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/046lPtUl8a

— Super Good Films (@SuperGoodFilms_) September 8, 2022