மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாகவும் சிறந்த நடிகராகவும் திகழும் நடிகர் மம்மூட்டி அவர்கள் நடிப்பில் தொடர்ந்து இந்த ஆண்டு(2022) வரிசையாக திரைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் முதலாவதாக மம்மூட்டி நடிப்பில் வெளிவரத் தயாராகி வரும் திரைப்படம் நண்பகல் நேரத்து மயக்கம்.

அங்கமாலி டைரீஸ் மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்களின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடரந்து கிறிஸ்டோபர் மற்றும் கடுகண்ணவா ஒரு யாத்ரா ஆகிய படங்களில் மம்மூட்டி நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் இயக்குனர் நிசாம் பஷீர் இயக்கத்தில் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் திரில்லர் படமாக மம்மூட்டி நடித்த திரைப்படம் ரோர்சாச். மம்மூட்டி கம்பெனி நடிகர் மம்மூட்டி தயாரித்து நடிக்கும் ரோர்சாச் திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மான் தனது பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் வழங்குகிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் கிரன் தாஸ் படத்தொகுப்பு செய்யும், ரோர்சாச் திரைப்படத்திற்கு மீதுன் முகுந்தன் இசை அமைத்துள்ளார். 

இந்நிலையில் நடிகர் மம்மூட்டியின் பிறந்த நாளான இன்று (செப்டம்பர் - 7)  அவரது பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக ரோர்சாச் படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மம்மூட்டியின் மிரட்டலான நடிப்பில் வெளிவந்துள்ள ரோர்சாச் திரைப்படத்தின் ட்ரைலர் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. ரோர்சாச் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. அசத்தலான அந்த ட்ரைலர் இதோ…