தனது முதல் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். நடிகர் வெற்றி மற்றும் சூரரைப்போற்று படத்தின் நாயகியான அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்து வெளிவந்த 8 தோட்டாக்கள் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து நடிகர் அதர்வாவுடன் இணைந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் ஆக்சன் த்ரில்லர் திரைப்படமாக தயாரான குருதி ஆட்டம் திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் வெளியானது. தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனராக வளர்ந்து வரும் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்களுக்கு இன்று செப்டம்பர் 7-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த சீதக்காதி மற்றும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நெஞ்சுக்கு நீதி படங்களில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகையும் தனது நீண்ட நாள் காதலியுமான சுஹாசினியை இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் மற்றும் சுஹாசினியின் திருமணம் சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இத்திருமணத்தில் நண்பர்கள் & தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். புதுமண தம்பதிகளான ஸ்ரீ கணேஷ் மற்றும் சுஹாசினிக்கு கலாட்டா குழுமம் தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
 

 

View this post on Instagram

A post shared by Riyaz A (@riyaz_ctc)