தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 30-வது திரைப்படமாக சைரன் திரைப்படத்தில் நடிக்கிறார். ஜெயம் ரவியுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் செய்யறேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

முன்னதாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் கதாநாயகனாக அருள்மொழிவர்மன் (எ) பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நேற்று(செப்-6) சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் வெளியாகி, ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற ராஜா கைய வச்சா பாடலுக்கு ஜெயம்ரவி நடனமாடும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியில் கமல்ஹாசன் அவர்களின் மீது தனக்கு இருக்கும் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஜெயம் ரவி ராஜா கைய வச்சா பாடலுக்கு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ இதோ…
 

Thank u for this video 😍🙏🏼 https://t.co/KuFmQqOYA6

— Jayam Ravi (@actor_jayamravi) September 7, 2022