'வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது!'- தனது அடுத்த படம் குறித்து விக்னேஷ் சிவனின் அட்டகாசமான முதல் அறிவிப்பு! உற்சாகத்தில் ரசிகர்கள்

தனது அடுத்த படம் குறித்து விக்னேஷ் சிவன் அறிவிப்பு,director vignesh shivan first official announcement of his next movie | Galatta

தொடர்ந்து தனக்கென தனி பாணியில் அனைத்து ரசிகர்களும் விரும்பும் வகையிலான லைட் ஹார்டெட் திரைப்படங்களாக கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் சிலம்பரசன்.TR கதாநாயகனாக நடித்த போடா போடி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தொடர்ந்து விஜய் சேதுபதி - நயன்தாரா இணைந்து நடிக்க, வெளிவந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பு பெற்ற நானும் ரவுடி தான் படத்திற்கு குறிப்பிடப்படும் இயக்குனராக பிரபலமடைந்தார் விக்னேஷ் சிவன். அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் கைகோர்த்த இயக்குனர் விக்னேஷ் சிவன் பாலிவுட்டில் அக்ஷய் குமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக்காக உருவாக்கிய தானா சேர்ந்த கூட்டம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற தொடர்ந்து NETFLIX தளத்தில் வெளிவந்த பாவக்கதைகள் ஆந்தாலஜி வெப்சீரிசில் லவ் பண்ணா உட்ரனும் எனும் எபிசோடை இயக்கினார்.

கடைசியாக விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா மூவரும் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த வரிசையில் இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்தடுத்த படங்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தனது அடுத்த படத்தில் முதல் முறையாக அஜித் குமார் உடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைவதாக அறிவிப்பு வெளியானது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அஜித்குமாரின் 62 வது படமாக விக்னேஷ் சிவன் இயக்கும் AK62 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. 

இதனிடையே சமீபத்தில் AK62 திரைப்படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகியிருப்பதாக தகவல்கள் வந்தன.  AK62 திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவில்லை என்றால் வேறு எந்த இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவராத நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகி இருப்பதாக வெளிவந்த தகவல்கள் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தன. இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரைப் பயணத்தில் 6வது திரைப்படமாக இயக்கும் அடுத்த படம் குறித்து தற்போது சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் வெளிவந்துள்ளன அந்த வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் இப்படத்தில் கோமாளி மற்றும் லவ் டுடே திரைப்படங்களில் இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக கோலிவுட் வட்டாரம் மிகுந்த ஆவலோடு காத்திருக்கிறது.

இந்நிலையில் தனது அடுத்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகன் முத்தமிட்டபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன், “#SonKissed ❤️ என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி !!!  வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும் , வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது!” “ஒருபோதும் விட்டுக் கொடுப்பதில்லை!!! நேரடியாக இதயத்தில் இருந்து என்னுடைய #Wikki6 திரைப்படத்திற்கு தயாராகிறேன்.” என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இயக்குனர் விக்னேஷ் சிவனின் இந்த பதிவால் தற்போது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதுகுறித்த இதர அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

View this post on Instagram

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த இந்தியன் 2 பிரபலம்! வேற லெவல் அறிவிப்பு இதோ
சினிமா

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த இந்தியன் 2 பிரபலம்! வேற லெவல் அறிவிப்பு இதோ

தனுஷ் ரசிகர்களுக்கான அடுத்த ஸ்பெஷல் பரிசு தயார்... ஆவலோடு எதிர்பார்த்த வாத்தி பட அதிரடியான OTT ரிலீஸ் அறிவிப்பு!
சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கான அடுத்த ஸ்பெஷல் பரிசு தயார்... ஆவலோடு எதிர்பார்த்த வாத்தி பட அதிரடியான OTT ரிலீஸ் அறிவிப்பு!

'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே
சினிமா

'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே