கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த இந்தியன் 2 பிரபலம்! வேற லெவல் அறிவிப்பு இதோ

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயனின் SK21 பட புது அறிவிப்பு,Costume designer amritha ram joins with kamal haasan sivakarthikeyan in sk21 movie | Galatta

இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த திரை மேதையாக தனது ஒவ்வொரு படைப்புகளின் வாயிலாகவும் ரசிகர்களின் ரசனையை மெருகேற்றி வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்தடுத்து அதிரடியான திரைப்படங்களில் நடிக்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது நாயகன் திரைப்படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் புதிய படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த KH234 திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். விரைவில் KH234 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் மதுரையை கதைக்களமாகக் கொண்டு விருமாண்டி பாணியில் கமல்ஹாசனின் திரைப்படத்தை இயக்க விரும்புவதாக தெரிவித்த நிலையில், அதே விழாவில் பேசும்போது கமல்ஹாசனும் அதனை உறுதிப்படுத்தினார். 

இது தவிர இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. மேலும் மலையாளத்தில் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான மாலிக் படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஒரு படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு திரைக்கதையும் கமல்ஹாசன் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்த வருகிறார். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பல தடைகளை கடந்து தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனிடையே உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். தற்சமயம் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அதிரடியான திரைப்படமாக தயாராகும் மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட VFX தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த கோடை விடுமுறையில் அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 51-வது திரைப்படமாகவும் சிவகார்த்திகேயனின் 21வது திரைப்படமாகவும் ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசனின் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் அமிர்தா ராம் சிவகார்த்திகேயனின் SK21 படத்திலும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என தற்போது அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Amritharam (@amritha.ram)

'ஏதோ வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க!'- உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட கலகலப்பான சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'ஏதோ வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க!'- உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட கலகலப்பான சிறப்பு பேட்டி இதோ!

சினிமா

"இயக்குனராக களமிறங்கும் அட்டகாசமான திட்டம் இது தான்!" ரசிகரின் கேள்விக்கு ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவியின் சுவாரஸ்யமான பதில் இதோ!

1990's-களின் இனிய நினைவுகளாக பிரபுதேவா - ரெஜினா கெஸன்ட்ராவின் ஃப்ளாஷ்பேக்... கவனிக்க வைக்கும் அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

1990's-களின் இனிய நினைவுகளாக பிரபுதேவா - ரெஜினா கெஸன்ட்ராவின் ஃப்ளாஷ்பேக்... கவனிக்க வைக்கும் அசத்தலான ட்ரெய்லர் இதோ!