மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ARரஹ்மான் பகிர்ந்த ஸ்வீட்டான செய்தி! குவியும் வாழ்த்துகள்

திருமண நாளை குறிப்பிட்டு ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட புகைப்படம்,A r rahman shared a photo with his wife on wedding anniversary | Galatta

இந்திய சினிமாவின் நட்சத்திர இசையமைப்பாளராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்கு இடைவிடாத இசை விருந்து கொடுத்து வருபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இன்றைய தலைமுறையில் பல வளரும் இசையமைப்பாளர்களுக்கு முன் உதாரணமாக திகழும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்குப் பிறகு இந்திய சினிமாவின் இசையின் சத்தமே மாறியது என்று சொல்லலாம். உலக அரங்கில் தமிழ் இசையை ஒலிக்க வைத்த ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையின் வாயிலாக ரசிகர்களின் ரசனையை தொடர்ந்து மெருகேற்றி வருகிறார். தற்போதைய இசை உலகின் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலக தரத்திலான ஒரு டிஜிட்டல் தளமாக கற்றார் எனும் தளத்தை தனது பிறந்த நாளில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் பார்த்திபன் அவர்களின் சாதனை படைப்பாக வெளிவந்த இரவின் நிழல், சீயான் விக்ரம் மிரட்டலான பல கெட்டப்பில் நடித்து அசத்திய கோப்ரா, இயக்குனர் கௌதம் மேனன் - சிலம்பரசன்.TR வெற்றி கூட்டணியின் வெந்து தணிந்தது காடு, இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படைப்பாக வெளிவந்த பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் பாகம் 1 ஆகிய திரைப்படங்களில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளிவந்த பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தன. தமிழில் மட்டுமல்லாது மலையாளத்தில் ஃபகத் பாஸில் நடிப்பில் வெளிவந்த மலையன்குஞ்சு, பாலிவுட்டில் ஹீரோபண்டி 2 மற்றும் மில்லி ஆகிய திரைப்படங்களுக்கும் இசைப்புயலின் இசை தான். 

அதேபோல் தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் சிலம்பரசன்.TR - கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள பத்து தல, இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மிப்பான பொன்னியின் செல்வன் பாகம் 2, சிவகார்த்திகேயனின் ஏலியன் சயின்ஸ் ஃபிக்சன் படமான அயலான், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள மாமன்னன், மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கும் லால் சலாம் ஆகிய திரைப்படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தங்களது திருமண நாளை குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கலாட்டா குழுமம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பல கோடி ரசிகர்களும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

💍 🤲 🫶 pic.twitter.com/j5EQblzhAe

— A.R.Rahman (@arrahman) March 11, 2023

'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே
சினிமா

'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே

'ஏதோ வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க!'- உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட கலகலப்பான சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'ஏதோ வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க!'- உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட கலகலப்பான சிறப்பு பேட்டி இதோ!

சினிமா

"இயக்குனராக களமிறங்கும் அட்டகாசமான திட்டம் இது தான்!" ரசிகரின் கேள்விக்கு ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவியின் சுவாரஸ்யமான பதில் இதோ!