"தவறான அட்வைஸ்களால் தவறவிட்டேன்!"- வரலக்ஷ்மி சரத்குமார் கைவிட்ட படங்கள்... ஆச்சரியமூட்டும் பட்டியல் இதோ!

வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த தவறவிட்ட திரைப்படங்களின் பட்டியல்,Varalaxmi sarathkumar shared a list movies she missed | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராகவும் தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் நடிகைகளின் ஒருவராகவும் தொடர்ந்து தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்காக தனி இடம் பிடித்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் முதல் திரைப்படமாக நடிகர் சிலம்பரசன்.TR நடிப்பில் வெளிவந்த போடா போடி திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். 

வழக்கமான கதாநாயகியாக கதாநாயகர்கள் உடன் இணைந்து டூயட் பாடுவதற்காக மட்டுமே இல்லாமல் கதையின் நாயகியாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை, இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரியின் விக்ரம் வேதா, ஆக்ஷன் கிங் அர்ஜுனின் நிபுணன், சிபி சத்யராஜின் சத்யா, லிங்குசாமியின் சண்டக்கோழி 2 மற்றும் எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் ஆகிய படங்களில் அதிரடியான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார். தொடர்ந்து ஙதளபதி விஜய் உடன் இணைந்து சர்க்கார், தனுஷின் மாரி 2, இயக்குனர் பார்த்திபனின் இரவின் நிழல், பிரபு தேவாவின் பொய்க்கால் குதிரை, சமந்தாவின் யசோதா உள்ளிட்ட திரைப்படங்களிலும் மிக முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார் வரலக்ஷ்மி. 

கடைசியாக நடிகை வரலக்ஷ்மி நடிப்பில் இந்த 2023ம் ஆண்டு வெளிவந்த விந்தியா விக்டிம் வெர்டிக்ட் 3 எனும் V3 திரைப்படம், பொங்கல் வெளியீடாக தெலுங்கில் நடிகர் நந்தாமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த வீரசிம்ம ரெட்டி படம், மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மைக்கேல் ஆகிய திரைப்படங்களில் மிரட்டலான கதாபாத்திரங்களில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்திருந்தார். இந்த வரிசையில் அடுத்து அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக தயாராகும் சபரி படத்தில் கதாநாயகியாக நடிகை வரலக்ஷ்மி நடிக்கிறார். தொடர்ந்து பாம்பன், பிறந்தால் பராசக்தி  உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஹனுமான் எனும் தெலுங்கு படத்திலும், கலர்ஸ் என்ன மலையாள படத்திலும், லாகம் எனும் கன்னட படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் தயாராகியுள்ள கொன்றால் பாவம் திரைப்படம் நிறைய உடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. 

இந்நிலையில் நமது கலாட்டா சேனலில் நடைபெற்ற வரலக்ஷ்மி சரத்குமார் FANS MEETல் ரசிகர்களை சந்தித்து பேசிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பலரது தவறான அறிவுரைகளால் பல நல்ல திரைப்படங்களின் வாய்ப்புகளை தான் தவறவிட்டதாக தெரிவித்துள்ள நடிகை வரலக்ஷ்மி, உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கதாநாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி, சித்தார்த் மற்றும் அமலாபால் இணைந்து நடித்த காதலில் சொதப்புவது எப்படி, இயக்குனர் பாலாஜி சக்திவேலின் காதல், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்த காக்க காக்க, இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்கள் தான் நடிக்க வேண்டியதாக இருந்தது என நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்ட வரலக்ஷ்மி சரத்குமாரின் அந்த முழு பேட்டி இதோ…
 

தனுஷ் ரசிகர்களுக்கான அடுத்த ஸ்பெஷல் பரிசு தயார்... ஆவலோடு எதிர்பார்த்த வாத்தி பட அதிரடியான OTT ரிலீஸ் அறிவிப்பு!
சினிமா

தனுஷ் ரசிகர்களுக்கான அடுத்த ஸ்பெஷல் பரிசு தயார்... ஆவலோடு எதிர்பார்த்த வாத்தி பட அதிரடியான OTT ரிலீஸ் அறிவிப்பு!

'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே
சினிமா

'பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணம் இது தான்!'- உண்மையை உடைத்த சாய் காயத்ரி! வீடியோ உள்ளே

'ஏதோ வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க!'- உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட கலகலப்பான சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

'ஏதோ வெற்றிமாறன் படம் மாதிரி DECODE பண்றீங்க!'- உதயநிதி ஸ்டாலினின் கண்ணை நம்பாதே பட கலகலப்பான சிறப்பு பேட்டி இதோ!