ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு முடங்கியது.. நடந்தது என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்.. வைரலாகும் பதிவு இதோ..

ஹேக் செய்யப்பட்ட ஹாரிஸ் ஜெயராஜ் ட்விட்டர் கணக்கு விவரம் இதோ - Harris Jayaraj Twitter account hacked | Galatta

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இசையமைப்பளர்களில் ஒருவர் ஹாரிஸ் ஜெயராஜ். ‘மின்னலே’ படம் மூலம் அறிமுகமாகி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் நூறுக்கும் மேற்பட்ட மற்ற இசையமைப்பாளர்களின் பாடலுக்கு இசைக்குழுவில் இருந்தவர். தன் கடின உழைப்பினாலும் நவீனத்தின் உச்சம் வரை சென்று தனித்துவமான பாடல்களை கொடுத்தும் ரசிகர்களின் மனதை கவர்ந்து அவர்களால் ‘இசை மின்னல் என்றழைக்கப்படுகிறார். காதல் படம் என்றாலே அதில் ஹாரிஸ் என்ற பிம்பத்தை உருவாக்கியவர்.  ஏ ஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, இளையராஜா என்று ஜாம்பவான்கள் இருந்த நேரத்திலே தன் தனித்துவமான இசையினால் அவர்களை முந்தி தனி சாம்ராஜ்யத்தையே உருவாக்கினார். சூர்யா, மாதவன், இயக்குனர் கௌதம் மேனன், இயக்குனர் கே வி ஆனந்த்,இயக்குனர் ஹரி, இயக்குனர் ஜீவா மற்றும் பலரின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது ஹாரிஸ் ஜெயராஜ் இசையினால் தான் என்று சொன்னால் மிகையாகாது.

ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நவீன இசையயை அறிமுகப் படுத்துவது மட்டுமல்லாமல் அந்த பாடலை டிரெண்ட் செய்வதிலும் வித்தகராக இருப்பவர்.   கடந்த ஆண்டு லெஜண்ட் சரவணன் நடித்து வெளியான ‘லெஜண்ட் படத்திலும் இவரது இசை அதிகளவு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இசையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாள் கழித்து வெளியாகவுள்ள விக்ரமின் ‘துருவ நட்சத்திரம் படத்திற்கு பின்னணி இசையில் தற்போது இறங்கியுள்ளார்.  இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சமீபத்தில் பெரிதளவு திரைப்படங்கள் ஏதும் ஒப்பந்தமாகவில்லை என்றாலும் அவரது முந்தைய பாடல்களை இன்னமும் ரசிகர் பல இடங்களில் ஒலிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் ரசிகர்களுடன் இணையத்தில் அவ்வப்போது கலந்துரையாடுவது அவர்களின் கேள்விக்கு பதிலளிப்பது மற்றும் அவர்களின் பதிவுகளை லைக் செய்வது என்று இருப்பவர். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கு கடந்த இரண்டு நாட்களாக சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அது சரி செய்து வருவேன் என்றும் ஹாரிஸ் ஜெயராஜின் முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து அந்த பதிவினை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு Bio Pic ஆக மாறுமா? - ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..
சினிமா

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு Bio Pic ஆக மாறுமா? - ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..

“நான் பயந்துட்டேன்னு சொல்லுவாங்க..” அரசியல் விமர்சனத்திற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த் – வைரலாகும் சுவாரஸ்யமான பேச்சு இதோ..
சினிமா

“நான் பயந்துட்டேன்னு சொல்லுவாங்க..” அரசியல் விமர்சனத்திற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த் – வைரலாகும் சுவாரஸ்யமான பேச்சு இதோ..

சிவகார்த்திகேனின் ‘மாவீரன்’ படத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் .. - அட்டகாசமான வீடியோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விவரம் உள்ளே..
சினிமா

சிவகார்த்திகேனின் ‘மாவீரன்’ படத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம் .. - அட்டகாசமான வீடியோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு.. விவரம் உள்ளே..