என்னது 5 மணி நேரமா?.. வெற்றிமாறனின் ‘வடசென்னை’ குறித்து சந்தோஷ் நாராயணன் - சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

வடசென்னை படம் குறித்து அட்டகாசமான தகவலை பகிர்ந்த சந்தோஷ் நாராயணன் - Santhosh Narayanan about Vetrimaaran vadachennai movie | Galatta

70 காலத்தில் அடிப்படையில் வடசென்னை நிலபரப்பினையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வியலையும் புனைவுடன் திரைக்கதை அமைத்து அட்டகாசமான திரைப்படமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ம் ஆண்டில் வெளியான திரைப்படம் ‘வடசென்னை. லைகா நிறுவனம் , தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ் ரோட் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கிய இப்படத்தில் தனுஷ் கதாநயகனாக  நடிக்க அவருடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ், ஆடுகளம் கிஷோர், சமுத்திரகனி, ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்று இன்று வரை ரசிகர் மத்தியில் பேசு பொருளாக இருந்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்ள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். .  

தமிழ் சினிமாவில் ஆகசிறந்த அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக வடசென்னை இதுவரை  இருந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிய சந்தோஷ் நாராயாணன் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பெட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார். அதில் வடசென்னை படம் குறித்து அவர் பேசுகையில்,

"நான் வடசென்னை படத்திற்கு வேலை பார்க்கும் போது எனக்கு வடசென்னை படத்தை 5 மணி நேர அளவில் வெற்றிமாறன் காட்டினார். பின்னர் தான் அப்படம் 3 மணி நேரமாக குறைக்கப்பட்டது. அந்த திரைப்படம் வேற மாதிரி இருந்தது. அற்புதமாக இருந்தது. நான் பார்த்து முடிச்சுட்டு அவரிடம் கேட்டேன்.‌ நாம் இதை வெப் சீரிஸாக வெளியிட போறோமா என்றேன்.‌ அந்த படத்தில் பிரம்மிக்க வைக்கும் அளவு நிறைய இருந்தது. நிறைய கதாபாத்திரத்திரங்களின் அறிமுகம் இருந்தது. அவர்களின் பின்புலம் இருந்தது. நான் பொதுவாகவே வெப் சீரிஸ் பார்ப்பது ரொம்ப பிடிக்கும். கடந்த 4,5 ஆண்டுகளில் ஒரு நாளுக்கு ஒரு எபிசோடாக பார்ப்பேன். நான் தூக்குவதற்கு‌ முன் ஒரு எபிசோடாவது பார்த்துவிடுவேன். இப்போது 'ஃபர்ஸி' பார்த்து கொண்டு இருக்கிறேன்.  நான் பார்த்து விட்டு சேதுபதி அண்ணா கிட்ட பேசுனேன்." என்றார்

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘விடுதலை இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது இந்த இரண்டு படங்களும் முடிந்த பின் வெற்றிமாறன் சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். வாடிவாசல் படம் முடிந்த பின் தான் ‘வடசென்னை இரண்டாம் பாகம் உருவாகும் என்று விடுதலை இசை வெளியீடு விழாவில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பகிர்ந்த முழு வீடியோ இதோ..

 

“எனக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் சண்டை?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலக்ஷ்மி சரத்குமார் – சுவாரஸ்யமான வீடியோவுடன் விவரம் உள்ளே..
சினிமா

“எனக்கும் ஸ்ருதி ஹாசனுக்கும் சண்டை?” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலக்ஷ்மி சரத்குமார் – சுவாரஸ்யமான வீடியோவுடன் விவரம் உள்ளே..

Time Travel படமாக உருவாகி வரும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’.. - வைரலாகும் இயக்குனரின் அப்டேட்.. விவரம் இதே..
சினிமா

Time Travel படமாக உருவாகி வரும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’.. - வைரலாகும் இயக்குனரின் அப்டேட்.. விவரம் இதே..

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு Bio Pic ஆக மாறுமா? - ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..
சினிமா

முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு Bio Pic ஆக மாறுமா? - ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..