மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் உச்சரிக்கப்படும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தற்போது தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக இந்த நவம்பர் 4ஆம் தேதி தீபாவளியன்று வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாரின் தங்கையாக கி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை நெகிழ வைத்தார். மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, மலையாளத்தில் மோகன்லாலின் அரபிகடலின்டே சிம்ஹம் மற்றும் இயக்குனர் செல்வராகவன் முதல் முறை கதாநாயகனாக நடிக்கும் சாணி காயிதம் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்

அடுத்ததாக இயக்குனர் நாகேஷ் குக்குன்னூர் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள குட் லக் சகி வருகிற நவம்பர் 26ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் குட் லக் சகி திரைப்படத்தில் நடிகர்கள் ஜெகபதி பாபு மற்றும் ஆதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

குட் லக் சகி திரைப்படத்திற்கு சிரத்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பேட் லக் சகி பாடலின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியானது.இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.