மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் துல்கர் சல்மான் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர். தொடர்ந்து தமிழ் ஹிந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக முன்னணி நடன இயக்குனரான பிருந்தா இயக்கும் முதல் திரைப்படமாக தமிழில் ஹே சினாமிகா , மலையாளத்தில் சல்யூட், ஹிந்தியில் இயக்குனர் பால்கி இயக்கத்தில் சுப்-ரிவஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் மற்றும் தெலுங்கில் யுத்தம் தோ ராசினா பிரேம கதா படத்தில் ராணுவ வீரராக நடித்து வருகிறார் துல்கர்.

அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் வருகிற நவம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது குருப் திரைப்படம். இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கிரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் குருப் படத்தில் துல்கருடன் இணைந்து டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சன்னி வெய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஷபீடா துள்ளிபலா, சுரபி லக்ஷ்மி மற்றும் பரத் சீனிவாசன் ஆகியோர் நடித்துள்ளனர். 

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியாகும் குருப் திரைப்படத்தை நிமிஷ் ரவி ஒளிப்பதிவில் சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ள குருப் வேஃபெரர் பிலிம்ஸ் சார்பில் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்துள்ளார். குருப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் பாடியுள்ள கலக்கலான டிங்கிரி டிங்காலே பாடல் சற்று முன்பு வெளியானது. அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.