தமிழ் சினிமாவில் தனது திரைப்பயணத்தை தொடங்கி ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படங்கள் எடுத்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் ஷங்கர்.கமல்ஹாசன் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தினை இயக்கி வந்தார் ஷங்கர்.

இந்த படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டுள்ளது.இதனை தொடர்ந்து ரன்வீர் கபூர் நடிப்பில் அந்நியன் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்க தயாராகி வருகிறார்.இதனை தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் தயாராகி வரும் RC 15 படத்தினை இயக்கி வருகிறார்.

இதனை தவிர சில தரமான படங்களை தயாரித்தும் அசத்தியுள்ளார்.இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து சிறப்பிப்பதாக தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான வேல்ஸ் யூனிவர்சிட்டி சில தினங்களுக்கு முன் அறிவித்தனர்.

இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இயக்குனர் ஷங்கருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.ஷங்கருடன் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கௌரவ டாக்டர் படம் வழங்கப்பட்டுள்ளது.