பழனி முருகன் கோவிலில் நடிகை சமந்தா... உடல்நிலை பூரண குணமடைய வேண்டி படிகளில் கற்பூரம் ஏற்றி வழிபாடு! வீடியோ இதோ

பழனி முருகன் கோவிலில் சமந்தா வழிபாடு,actress samantha visits pazhani murugan temple for her health | Galatta

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழும் நடிகை சமந்தா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான யே மாயா சேசாவே படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகில் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கௌரவ வேடத்தில் நடித்த சமந்தா, பின்னர் நடிகர் அதர்வாவின் முதல் திரைப்படமான பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கினார். தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி படத்தில் நடித்த சமந்தா, இயக்குனர் SS.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான நான் ஈ திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.

அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் அனைவரோடும் இணைந்து நடித்த சமந்தா, தமிழில் தளபதி விஜயின் கத்தி, தெறி, மெர்சல் , சூர்யாவின் அஞ்சான், 24, சீயான் விக்ரமின் 10 எண்றதுக்குள்ள, தனுஷின் தங்க மகன், விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் சீமா ராஜா, இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாக அனைவரது இதயங்களையும் கொள்ளையடித்தார். மேலும் கதாநாயகிகளை முன்னிறுத்திய கதை களங்களை கொண்ட U-Turn மற்றும் ஓ பேபி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வரும் நடிகை சமந்தா கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இந்திய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியும் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார்.

கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து சமந்தா நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டாக,  தொடர்ந்து அதிரடி ஆக்சன் திரைப்படமாக சமந்தா நடிப்பில் பேன் இந்தியா படமாக பல மொழிகளில் வெளிவந்த யசோதா திரைப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து ரொமான்டிக் காமெடி திரைப்படமாக தயாராகி வரும் குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வரும் சமந்தா ஹாலிவுட்டிலும் களமிறங்கியுள்ளார். இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் உருவாகும் அரேஞ்மெண்ட்ஸ் ஆப் லவ் எனும் ஆங்கில திரைப்படத்தில் நடிகை சமந்தா கதாநாயகி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நடிகை சமந்தா நடிப்பில் இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் சகுந்தலம் திரைப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிடும் சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படம் பிரம்மாண்டமான திரைப்படமாக வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். முன்னதாக மிகவும் அரிய வகை நோய்களில் ஒன்றான மையோஸிட்டிஸ் எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவித்த நடிகை சமந்தா மிகுந்த வலியின் காரணமாக பல சமயங்களில் படுக்கையிலிருந்து எழுந்து நிற்க கூட முடியாமல் துடித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது தனது உடல்நிலை பூரண குணமடைய வேண்டி பழனி மலை முருகன் கோவிலில் படிகளில் கற்பூரம் ஏற்றி நடிகை சமந்தா வழிபாடு செய்துள்ளார். விரைவில் நடிகை சமந்தா பூரண குணமடைய கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது. பழனி மலையில் வழிபாடு செய்த நடிகை சமந்தாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இதோ
 

உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி, பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா.@Samanthaprabhu2 #Samantha #SamanthaRuthPrabhu #Palani #MuruganTemple #Galatta pic.twitter.com/jCFgT5uLBs

— Galatta Media (@galattadotcom) February 13, 2023

பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகை சமந்தா!#Samantha #SamanthaRuthPrabhu𓃵 #Palani #Galatta pic.twitter.com/5bZWY1TbWK

— Galatta Media (@galattadotcom) February 13, 2023

திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

சினிமா

"அடுத்த இலக்கு ஒலிம்பிக் தான்!"- தொடரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்தின் வெற்றி பயணம்... குவியும் பாராட்டுகள்!

சினிமா

"கலை ஜனநாயகத்தின் தூண்!"- குலு குலு படம் மீதான சென்சார் குழுவின் செயலுக்கு இயக்குனர் ரத்னகுமார் கண்டனம்! விவரம் உள்ளே