‘சர்தார்’, ‘ரன் பேபி ரன்’ வரிசையில் அடுத்த முக்கிய படத்துடன் களமிறங்கும் பிரபல தயாரிப்பு நிறுவனம் - அட்டகாசமான அப்டேட் இதோ..

பசுபதி நடிப்பில் உருவாகி வரும் தண்டட்டி படத்தின் முதல் பார்வை வெளியானது -  Actor Pasupathy upcoming film thandatti film first look released | Galatta

சம கால தமிழ்சினிமாவில் மிக முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பிரின்ஸ் பிக்சர்ஸ். வெகு சில படங்களை தயாரிதாலும் தயாரித்த பெரும்பாலான திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாகவே இவர்களுக்கு அமைந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் இந்த ஆண்டில் பிப்ரவரி  மாதம் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரன் பேபி ரன்’ மிகப்பெரிய வரவேற்பை பல இடங்களில் பெற்று வருகிறது. முன்னதாக பிரின்ஸ் பிக்சர் தயாரிப்பில்  சிங்கம் 2, காரி, தேவ், மோகினி உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் ரன் பேபி ரன் திரைப்படத்தை இயக்கிய ஜியன் கிருஷ்ணன் அடுத்த படத்தையும் தயரிக்கவிருக்கிறது பிரின்ஸ் பிக்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

Presenting the first look of #Thandatti - an endearing rural entertainer.@Dir_RamSangaiah @lakku76 @Venkatavmedia @PasupathyMasi @Rohinimolleti @SundaramurthyKS @actorvivekpra @Ammu_Abhirami pic.twitter.com/ppLOEaGq3X

— Prince Pictures (@Prince_Pictures) February 14, 2023

இந்நிலையில் தற்போது பிரின்ஸ் பிக்சர் தங்களது தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தின்  அறிவிப்பை வெளியிட்டது. பசுபதி, ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி நடிப்பில் அறிமுக இயக்குனர் ராம் செங்கய்யா இயக்கவுள்ள ‘தண்டட்டி’ திரைப்படத்தை தயாரித்து வருகிறது.  நடிகை ரோகினி சவமாய் நாற்காலியில் அமர வைத்து ஒருபுறம் காவலதிகாரியாக பசுபதியும் ஒரு புறம் அருவாளுடன் விவேக் பிரசன்னா வும் இருக்கும் மாதிரி திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் தற்போது வெளியிட்டுள்ளது பிரின்ஸ் பிக்சர். இதனையடுத்து முதல் பார்வை அதிகளவு கவரப்பட்டு வைரலாகி வருகிறது. இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார் மகேஷ் முத்துசாமி, கேஎஸ் சுந்தரசாமி இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

vijay antony recent tweet about north indians in tamil nadu

நடிகர் பசுபதி தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர். குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் பல படங்களில் கவனம் பெற்று மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றவர். கமல் ஹாசனுடன் ‘விருமாண்டி’ திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற பசுபதி அதனை தொடர்ந்து ‘திருப்பாச்சி’, ‘சுள்ளான்’, ‘மதுர’, ‘தூள்’, ‘அருள்’, ஆகிய படங்களில் வில்லனாக ஜொலித்தார். பின் வெயில், குசேலன் ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்து தன் நடிப்பின் மூலம் ரசிகர் வட்டத்தை விரிவடைய செய்தார். சமீபத்தில் பசுபதி நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய அங்கீகராத்தை பசுபதிக்கு கொடுத்தது. மேலும் தற்போது பசுபதி பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாபாத்திரத்தை கச்சிதமாக நடிக்கும் பசுபதியின் புதிய படமான ‘தண்டட்டி’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

பாபா ரீ ரிலீஸ்.. படக்குழுவினரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

பாபா ரீ ரிலீஸ்.. படக்குழுவினரை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்.. - ரசிகர்களால் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்.. - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபல Rap Singer யோகி பி .. வீடியோ உள்ளே..
சினிமா

ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்.. - சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்த பிரபல Rap Singer யோகி பி .. வீடியோ உள்ளே..

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ரொமான்டிக்கான முதல் பாடல்… செம்ம ஸ்டைலான பாடாத பாட்டெல்லாம் ப்ரோமோ இதோ!
சினிமா

ராகவா லாரன்ஸின் ருத்ரன் பட ரொமான்டிக்கான முதல் பாடல்… செம்ம ஸ்டைலான பாடாத பாட்டெல்லாம் ப்ரோமோ இதோ!