"காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம்!"- காதலர் தினம் குறித்து உலகநாயகன் கமல்ஹாசனின் அறிக்கை இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் காதலர் தின வாழ்த்து,ulaganayagan kamal haasan valentines day wishes tweet | Galatta

காலத்தால் அழியாத படைப்புகளை கொடுத்து இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் கலைஞனாக திகழும் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் விக்ரம். உலக நாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக வெளிவந்த விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு ஆல் டைம் ரெக்கார்ட்டாக வசூலிலும் சாதனை படைத்தது. விக்ரம் திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

அந்த வகையில் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய இடைவெளிக்குப் பின் மீண்டும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் KH234 திரைப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ், ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் KH234 திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக மலையாளத்தில் நடிகர் ஃபகத் பாசில் நடிப்பில் வெளிவந்து இந்திய அளவில் ஹிட்டான மாலிக் திரைப்படத்தின் இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதும் உலகநாயகன் கதாநாயகனாகவும் நடிக்க இருக்கிறார்.

மேலும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் இஇயக்குனர்பா.ரஞ்சித் ஆகியோரது இயக்கத்திலும் அடுத்தடுத்த திரைப்படங்களில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முன்னதாக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த 2023 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என பன்முகத் தன்மை கொண்ட மனிதராக திகழும் உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலிலும் களமிறங்கினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் எனும் தனது அரசியல் கட்சியை தொடங்கி மிகச் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். மிகத் தேர்ந்த கலைஞராக சினிமாவிலும் நல்ல தலைவராக அரசியலிலும் திறம்பட பயணம் செய்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.” என பதிவிட்டுள்ளார் உலகநாயகன் கமலஹாசனின் இந்த காதலர் தின வாழ்த்து தற்போது சோசியல் மீடியாவில் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. உலக நாயகனின் அந்த காதலர் தின வாழ்த்து இதோ…

 

சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.

— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2023

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே
சினிமா

பிக் பாஸ் கவினின் டாடா படக்குழுவினருக்கு லோகேஷ் கனகராஜின் வாழ்த்து! விவரம் உள்ளே

திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

திருச்சிற்றம்பலம் பட இயக்குனர் மித்ரன் R ஜவஹரின் அடுத்த அதிரடி படைப்பு... புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

சினிமா

"அடுத்த இலக்கு ஒலிம்பிக் தான்!"- தொடரும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்தின் வெற்றி பயணம்... குவியும் பாராட்டுகள்!