தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் சசி இயக்கிய சொல்லாமலே திரைப்படத்தின் மூலம் முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து சசி இயக்கத்தில் வெளிவந்த ரோஜாக்கூட்டம் & டிஷ்யூம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டானது.

குறிப்பாக இயக்குனர் சசி இயக்கத்தில் வெளிவந்த பூ மற்றும் பிச்சைக்காரன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் அங்கீகரிக்கப்பட்டது. கடைசியாக சித்தார்த் மற்றும் ஜீவி பிரகாஷ் இணைந்து நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தை இயக்கிய சசி இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

தமிழ் சினிமாவின் பிரபல இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகை சித்தி இத்நானி கதாநாயகியாக நடிக்க, அழகிய காதல் திரைப்படமாக தயாராகும் நூறு கோடி வானவில் படத்தை இயக்குனர் சசி எழுதி இயக்குகிறார்.

மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா & அருண் அருணாச்சலம் இணைந்து தயாரிக்கும் நூறு கோடி வானவில் திரைப்படத்திற்கு பிரசன்னா.எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார். மேலும்இத்திரைப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் மற்றும் VJ பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நூறு கோடி வானவில் படத்தின் டைட்டிலை அறிவிக்கும் விதமாக அழகிய மோஷன் போஸ்டர் தற்போது வெளியானது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த மோஷன் போஸ்டர் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.