திருமண விழாவில் “நான் ஆதிக்கம் செலுத்துவேன்” என்ற பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்ணை,  திருமணத்தன்றே மணமகன் விவாகரத்து செய்து உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈராக் நாட்டில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடந்து உள்ளது.

இந்த திருமண நிகழ்வின் போது, மணப் பெண் ஒருவர் திருமணத்தன்று மெசைதரா என்ற சிரிய பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருக்கிறார்.

இந்தப் பாடலின் முதல் பகுதியில், “நான் ஆதிக்கம் செலுத்துவேன்.. என்னுடைய கண்டிப்பான அறிவுறுத்தல்களின் படி நீ ஆளப்படுவாய்” என்கிற அந்த பாடல் வரிகள் அமைந்திருந்தன.

அத்துடன், “என்னுடன் நீ இருக்கும் நாள் வரையிலும் என்னுடைய கட்டளைகளின்படி நடப்பாய். நான் திமிரானவள்” என்று, அந்த பாடல் வரிகள் இடம் பெற்று உள்ளன. இப்படியான அர்த்தங்கள் கொண்ட அந்த பாடலுக்கு அந்த திருமண விழா மேடையில் அந்த பாடலுக்கு திருமணம் முடிந்த அடுத்த சில நிமிடங்களில் அந்த மணப் பெண் நடனமாடி உள்ளார்.
 
மேலும், இந்தப் பாடலுக்கு மணப்பெண் நடனமாடியது, அங்கு வந்திருந்த அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், அங்கிருந்த மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர், மணப் பெண்ணின் குடும்பத்தினருடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இப்படியாக இரு குடும்பத்தினர் மத்தியில் ஏற்பட்ட சண்டை பெரிய அளவில் வெடிக்கவே, மணமகன் திருமணத்தன்றே மணப் பெண்னை விவாகரத்து செய்தார். 

இது போன்று, கடந்த 2021 ஆம் ஆண்டில் ஜோர்டானில் மணப் பெண் ஒருவர், மணமகன் தன்னுடைய கைக்களில் முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை இந்த “மெசைதரா” பாடலுடன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக, மணமகன் விவாகரத்து செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தற்போதும் மீண்டும் ஒரு விவகாரத்து சம்பவம் அரங்கேறி இருக்கிது.

இதனிடையே, திருமண நிகழ்வின் போது, மணப் பெண் குறிப்பிட்ட பாடல் ஒன்றுக்கு நடனமாடியதற்காக, மணப் பெண்னை திருமணத்தன்றே மணமகன் விவாகரத்து செய்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.