தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக  இருக்கிறார் தளபதி விஜய். துடிப்பான  இளம் நடிகராக இருந்த தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் தளபதி விஜய் அதிரடி காட்டி மாஸ் ஹீரோவாக முதன் முதலில் களமிறங்கிய திரைப்படம் திருமலை. கே பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ்  புஷ்பா கந்தசாமி அவர்களின் தயாரிப்பில் வித்யாசாகரின் இசையில் தளபதி விஜய்யும் நடிகை ஜோதிகாவும் இணைந்து நடித்த திருமலை திரைப்படத்தை இயக்குனர் ரமணா இயக்கியுள்ளார். 

director ramana mother in law passes away

திருமலை திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரமணா திருமலை திரைப்படத்தின் மாஸ் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து சுள்ளான் திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்த ரமணா 2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஆதி திரைப்படத்தை இயக்கினார். கில்லி திரைப்படத்திற்கு பிறகு விஜய்-த்ரிஷா இருவரும் இணைந்து  நடித்ததால் ஆதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திரைப்படம் எதிர்பார்த்தபடி வெற்றியைத் தரவில்லை. 

இதனிடையே இயக்குனர் ரமணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இயக்குனர் ரமணா திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். புற்று நோய்க்காக அவர் மேற்கொண்ட சிகிச்சையில் அவரது குரல் போனது. அன்று முதல் பேசும் திறனை சிறிது காலம் சிறந்த இயக்குனர் ரமணா கடின முயற்சிக்கு பிறகு  மீண்டும் பேசத் தொடங்கினார்.

இந்நிலையில் நேற்று  ரமணாவின் மனைவியின் தாயார் பத்மாவதி அம்மாள் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பத்மாவதி அம்மாவின் வயது 86. இயக்குனர் ரமணா அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்

என் மனைவின் தாயாரும், என் அன்னையைப் போன்றவருமான திருமதி. பத்மாவதி அம்மாள் (86) வயது மூப்பு காரணமாக இன்று இயற்கை...

Posted by Ramana Chandrasekar on Tuesday, May 4, 2021