பத்து தல டைட்டில் ஏன்..? உண்மையை உடைத்து சுவாரஸ்யமாக பதிலளித்த இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா! வீடியோ இதோ

பத்து தல டைட்டில் குறித்து மனம் திறந்த ஒபெலி N கிருஷ்ணா,director obeli n krishna about why pathu thala title | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதனை அடுத்து இவரது இயக்கத்தில் வெளிவந்த நெடுஞ்சாலை திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல கவனத்தை ஈர்த்தது.

இந்த வரிசையில் தனது அடுத்த படைப்பாக ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கியுள்ள திரைப்படம் பத்து தல. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் ரீமேக்காக இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து பத்து தல திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ஸ்டூடியோ கிரீன் சார்பில் K.E.ஞானவேல் ராஜா தயாரிக்கும் பத்து தல படத்திற்கு ஃபரூக்.J.பாஷா ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 30 ஆம் தேதி பத்து தல திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் அவரிடம், “பத்து தல என்று ஏன் டைட்டில் வைத்தோம்?” எனக் கேட்டபோது, “பத்து தல என்றால் யார்?” என்று கேட்டார். அதற்கு, “ராவணன்” என நாம் பதிலளிக்க, “ராவணன் யார்?” என மீண்டும் கேட்டார். அதற்கு, “அவர் ஒரு வில்லன் ஆனால் நல்லவர்” என நாம் பதிலளிக்க, “பதில் வந்து விட்டதா?” என சிரித்தபடியே சொன்னார். இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணாவின் அசத்தலான அந்த முழு பேட்டி இதோ…


 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக் பாஸ் கவினின் கலக்கலான டாடா... கலகலப்பான ஸ்னீக் பிக் வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக் பாஸ் கவினின் கலக்கலான டாடா... கலகலப்பான ஸ்னீக் பிக் வீடியோ இதோ!

காந்தாரா 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி... 100வது நாள் கொண்டாட்டத்தில் மாஸான அறிவிப்பு!
சினிமா

காந்தாரா 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி... 100வது நாள் கொண்டாட்டத்தில் மாஸான அறிவிப்பு!

சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!