சிலம்பரசனின் 'பத்து தல' இயக்குனருக்கு ஏஆர் ரஹ்மான் சொன்ன Advice.. – சுவராஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ இதோ..

பத்து தல இயக்குனருக்கு அட்வைஸ் கொடுத்த ஏ ஆர் ரஹ்மான் - Ar Rahman Advice to Pathu thala director | Galatta

கன்னட திரையுலகில் மெகா ஹிட் அடித்த 'மஃப்டி' படத்தின் ரீமேக்காக வெளிவரவிருக்கும் சிலம்பரசன் TR நடித்த 'பத்து தல' திரைப்படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியாகவிருக்கும் படமாக இருக்கின்றது. இப்படத்தை இயக்குகிறார் 'ஜில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' பட இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா. மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முன்னதாக  இவரது இசையில் ‘படத்தின் நம்ம சத்தம் பாடல் வெளியாகி வைரலானது. இப்படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க அவருடன் இணைந்து நடிகர் கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கலையரசன்,அனு சித்தாரா மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வரும் மார்ச் மாதம் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ஒபெலி N.கிருஷ்ணா நமது கலாட்டா தமிழ் மீடியா சிறப்பு  பேட்டியில் கலந்து கொண்டார்.

இதில் பத்து தல படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஏ.ஆர் ரஹ்மான் உடன் காதல் கதைகளத்தில் பணியாற்றி விட்டு தற்போது ஆக்ஷன் படத்தில் பணியாற்றுவது குறித்த கேள்விக்கு,

அவர், “ஏ ஆர் ரஹ்மான் சார் அவர் limitless person. அவருடைய முதல் படமே ‘ரோஜா காதல் படமாக இருந்தாலும் அதில் ஒரு தீவிரவாதம் கலந்த ஆக்ஷன் டிராக் ஓடிக் கொண்டிருக்கும். அந்த ஆக்ஷன் தருணத்திலும் அழகான காதல் பாடல்களை தந்தவர் அவர். அவருடைய முதல் படத்திலே அது போன்ற ஆல்பம் கொடுத்தவர். அதனால் ஆக்ஷன் படங்களுக்கு இசையமைப்பதெல்லாம் அவருக்கு கைவந்த கலை" என்றார். மேலும் அதனை தொடர்ந்து இந்த படத்தில் ஏ ஆர் ரஹ்மான் உங்களுடைய கூட்டணி எப்படி என்ற கேள்விக்கு,

“அவருடன் நான் என் முதல் படத்தில் பணியாற்றியதும் இந்த படத்தில் இப்போது பணியாற்றுவதற்கும் பெரிய வித்யாசம் ஏதும் இல்லை. இரண்டு படங்களுக்கும் ஒரே மாதிரியான உழைப்பு தான் கொடுத்திருக்கிறோம். இந்த பத்து தல படத்தில் பணியாற்றும் போது ஆரம்பத்திலே நான் ஏ ஆர் ரஹ்மான் சாரிடம் சொன்னேன். எல்லோரும் நம்முடைய முதல் படம் ஜில்லுனு ஒரு காதல் படத்துடன் இந்த படத்தை ஒப்பிட்டு பார்ப்பார்கள்..என்று அவருடன் பேசினேன். அப்போது அவர், “அந்த படத்திற்கு அது நிகழ்ந்தது. இந்த படத்திற்கு இது நடக்க போகுது. அதனால் அந்த படத்தை ஓரமாக வைத்து விடுவோம். இந்த படத்திற்கு எவ்வளவு உழைக்க முடியுமோ அவ்வளவு வேலைகள் போடுவோம் அதன் படி நல்ல பாடல்களை கொடுப்போம்". என்று சார் அப்போதே சொன்னார்”  என்றார் இயக்குனர் ஒபெலி N கிருஷ்ணா.   

மேலும் அதனை தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் போல் ஒரு காதல் படம் எப்போது கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு, “ஆக்ஷன் படங்களுக்கு தான் அதிகமா காசு தராங்க.. அதனால் இரண்டு மூன்று படங்கள் ஆக்ஷனில் செய்து விட்டு அதன் பிறகு பாப்போம்” என்றார்.  மேலும் பத்து தல படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பத்து தல பட இயக்குனர் ஒபெலி N. கிருஷ்ணா நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

விஜய் ரசிகர்களுக்கு Special treat.. வெளியானது அட்டகாசமான ‘வா தலைவா’ பாடல்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

விஜய் ரசிகர்களுக்கு Special treat.. வெளியானது அட்டகாசமான ‘வா தலைவா’ பாடல்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்

ஹன்சிகாவின் கலாட்டா கல்யாணம்.. வெளியானது ‘லவ் ஷாதி டிராமா’ டிரைலர் -  இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..
சினிமா

ஹன்சிகாவின் கலாட்டா கல்யாணம்.. வெளியானது ‘லவ் ஷாதி டிராமா’ டிரைலர் - இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..

அட்ராசக்க.. 'வாத்தி' பட நாயகியின் தரமான முடிவு - குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்..
சினிமா

அட்ராசக்க.. 'வாத்தி' பட நாயகியின் தரமான முடிவு - குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்..