இசைஞானியுடன் கைக்கோர்த்த தனுஷின் மயக்கும் குரலில் 'ஒன்னோட நடந்தா!' - வெற்றிமாறனின் விடுதலை பட முதல் பாடல் இதோ!

வெற்றிமாறனின் விடுதலை பட ஒன்னோட நடந்தா பாடல் வெளியீடு,Vetrimaaran in viduthalai movie first single onnoda nadantha out now | Galatta

இயக்குனர்களுக்கு முன் உதாரணமாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனராகவும் தமிழ் சினிமாவிற்கு காலத்தால் அழியாத தரமான படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படைப்பில் நடிகர் சூர்யாவுடன் இணைகிறார். கலைப்புலி.S.தாணு அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் துணைவன் சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் விடுதலை. நடிகர் சூரி மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன், சேத்தன் ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

RS இன்ஃபோடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள விடுதலை திரைப்படத்திற்கு R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், R.ராமர் படத்தொகுப்பு செய்ய, பீட்டர் ஹெய்ன் மற்றும் ஸ்டண் சிவா ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளது. 

அந்த வகையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தை வருகிற மார்ச் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. முன்னதாக விடுதலை படத்தின் முதல் பாடலான "ஒன்னோட நடந்தா..." எனும் பாடலை இசைஞானி இளையராஜாவின் இசையில் நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இந்த "ஒன்னோட நடந்தா..." பாடல் தற்போது வெளியானது. அந்தப் பாடல் இதோ…
 

காந்தாரா 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி... 100வது நாள் கொண்டாட்டத்தில் மாஸான அறிவிப்பு!
சினிமா

காந்தாரா 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி... 100வது நாள் கொண்டாட்டத்தில் மாஸான அறிவிப்பு!

சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!

ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மோகன்லால்... ட்ரெண்டாகும் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மோகன்லால்... ட்ரெண்டாகும் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!