அதிரடி ஆக்ஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்... சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியீடு!

ஸ்டண்ட் காட்சியில் காயமடைந்த அருண் விஜய்க்கு சிகிச்சை,arun vijay got injured and taking ayurvedic treatment in kerala | Galatta

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக தனக்கே உரித்தான ஸ்டைலில் அதிரடியான படங்களில் நடித்து வரும் நடிகர் அருண் விஜய், இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடித்த பார்டர் திரைப்படம் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வருகிற பிப்ரவரி 24ம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விரைவில் அருண் விஜயின் அக்னி சிறகுகள் திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

அடுத்ததாக இயக்குனர் AL.விஜய் இயக்கத்தில் உருவாகும் அச்சம் என்பது இல்லையே படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் ஃபர்ஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து வழங்கும் அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்க அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக தயாராகும் அச்சம் என்பது இல்லையே திரைப்படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் அருண் விஜய் காயமடைந்தார்.

ஸ்டன்ட் காட்சிகள் படமாக்கப்படும்போது காயமடைந்த நடிகர் அருண் விஜய் கடந்த 4 நாட்களாக ஆயுர்வேத முறையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்ளும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, “காயமடைந்த கால் மூட்டுக்கு பாரம்பரிய ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை பெறுகிறேன். 4வது நாள் சிகிச்சையில் இன்னும் நன்றாக உணர்கிறேன்… விரைவில் மீண்டு படப்பிடிப்பிற்கு திரும்புவேன்”  எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அருண் விஜயின் அந்தப் பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Arun Vijay (@arunvijayno1)

சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!
சினிமா

சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!

ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மோகன்லால்... ட்ரெண்டாகும் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!
சினிமா

ஜெயிலர் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - மோகன்லால்... ட்ரெண்டாகும் அசத்தலான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

மீண்டும் வேகமெடுக்கும் சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம்... சர்ப்ரைஸாக வந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

மீண்டும் வேகமெடுக்கும் சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம்... சர்ப்ரைஸாக வந்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!