டிரண்டாகும் கவினின் டாடா பட பாடல்.. – யுவன் குரலில் ‘போகாதே’ பாடலின் Special Video இதோ..

வெளியானது கவின் டாடா படத்தின் போகாதே பாடலின் சிறப்பு வீடியோ - Kavin Dada movie Pogathey promo song is out now | Galatta

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் ‘லிப்டு படம் மூலம் புகழ்பெற்ற கவினின் அடுத்தபடமான டாடா திரைப்படம் பிப்ரவரி 10 ம் தேதி தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. ஒரு குழந்தைக்கு தந்தையாக வரும் இளைஞன் சந்திக்கும் பிரச்சனைகளை பேசும் படமாக அமைந்திருக்கும் டாடா படத்தின் பாடல்கள், டீசர், டிரைலர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன் படி படத்தின் வெளியீடு குறித்து பரவலாக தற்போது இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தில் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா குரலில் இடம் பெற்றுள்ள ‘போகாதே பாடலின் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. முன்னதாக யுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் சிறிய கிளிப்பை வெளியிட்டு இணையத்தில் வைரலானது. அதன் தொடர்ச்சியாக இந்த பாடலின் சிறப்பு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜென் மார்டின் இசையில் “இந்த மனித பிறவி பெண் அன்பில் அடங்கிடும்” என்ற வரிகளை எழுதிய  விஷ்ணு எடவன் வழியில் உருவான இந்த பாடல் முன்னதாக ஒலி வடிவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.  இந்நிலையில் அந்த பாடலின் சிறப்பு வீடியோவும் தற்போது ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.

"Indha manidha piravi pen anbinil adangidum"@VishnuEdavan1 Inspire us mooooore!
Love you for what you are ♥️@JenMartinmusic Gem Martin 💎@thisisysr Sir.. this song will always have a place in my heart sir 🙏🏼@thinkmusicindia 💥#Pogadhe is here 🤍
▶️ https://t.co/UTAdZs1KSs

— Kavin (@Kavin_m_0431) February 8, 2023

நகைச்சுவை கலந்த குடும்பங்கள் பார்க்கக்கூடிய கதைகளத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் கவினுடன் இணைந்து பிரபல நடிகர் பாக்யராஜ்அபர்ணா தாஸ்ஹரிஷ்வி.டி.வி கணேஷ் மற்றும் பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் திரையரங்க வினியோகஸ்த உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகாவின் கலாட்டா கல்யாணம்.. வெளியானது ‘லவ் ஷாதி டிராமா’ டிரைலர் -  இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..
சினிமா

ஹன்சிகாவின் கலாட்டா கல்யாணம்.. வெளியானது ‘லவ் ஷாதி டிராமா’ டிரைலர் - இணையத்தை கலக்கும் வீடியோ இதோ..

அட்ராசக்க.. 'வாத்தி' பட நாயகியின் தரமான முடிவு - குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்..
சினிமா

அட்ராசக்க.. 'வாத்தி' பட நாயகியின் தரமான முடிவு - குவியும் ரசிகர்களின் பாராட்டுகள்..

“அனைவரும் திருப்தியடையும் படம் என்று ஒன்று இல்லை” மைக்கேல் பட விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி.. – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“அனைவரும் திருப்தியடையும் படம் என்று ஒன்று இல்லை” மைக்கேல் பட விமர்சனத்திற்கு இயக்குனர் பதிலடி.. – இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..