சந்தீப் கிஷனின் அதிரடி ஆக்ஷன் படமாக வந்த மைக்கேல்... ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் கலக்கலான வீடியோ இதோ!

சந்தீப் கிஷனின் மைக்கேல் பட பம்மாரே வீடியோ பாடல்,Sundeep kishan in michael movie pammare video song | Galatta

தற்போதைய இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமாக இயக்கிய மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகப் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அடுத்தடுத்து குறிப்பிடப்படும் படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக சந்தீப் கிஷன் வளர்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகர் தனுஷுடன் இணைந்துள்ள சந்தீப் கிஷன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அதிரடியான பீரியட் படமாக தயாராகும் கேப்டன் மில்லர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே தனது திரைப்பயணத்தில் குறிப்பிடப்படும் ரொமாண்டிக் - அதிரடி ஆக்சன் திரைப்படமாக சந்தீப் கிஷன் நடித்த திரைப்படம் மைக்கேல். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க, இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவாகி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மைக்கேல் திரைப்படம் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது.

சந்தீப் கிஷனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், R.சத்ய நாராயணன் படத்தொகுப்பு செய்யும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தின் பம்மாரே வீடியோ பாடல் தற்போது வெளியானது. துள்ளலான அந்த பாடல் இதோ…
 

“இது வேற லெவல் காம்போவா இருக்கே!”- இயக்குனர் ராம் உடன் கைகோர்க்கும் சிவா… புதிய படம் பூஜை உடன் ஆரம்பம்!
சினிமா

“இது வேற லெவல் காம்போவா இருக்கே!”- இயக்குனர் ராம் உடன் கைகோர்க்கும் சிவா… புதிய படம் பூஜை உடன் ஆரம்பம்!

மலர் டீச்சரோடு COMPARE பண்ணாதீங்க... மனம் திறந்த தனுஷின் வாத்தி பட நாயகி சம்யுக்தா! வீடியோ உள்ளே
சினிமா

மலர் டீச்சரோடு COMPARE பண்ணாதீங்க... மனம் திறந்த தனுஷின் வாத்தி பட நாயகி சம்யுக்தா! வீடியோ உள்ளே

சூப்பர் ஹிட் பட டைட்டிலில் யோகி பாபுவின் அடுத்த காமெடி என்டர்டெய்னர்... கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!
சினிமா

சூப்பர் ஹிட் பட டைட்டிலில் யோகி பாபுவின் அடுத்த காமெடி என்டர்டெய்னர்... கலக்கலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!