பெற்ற மகளையே நண்பனுடன் சேர்ந்த தந்தையே கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், 17 வயதான சிறுமி 8 மாத கர்ப்பமான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் விழுப்புரம் பகுதியில் தான் இப்படியான ஒரு மோசமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

விழுப்புரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுமி, தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

இப்படியான சூழலில், அந்த சிறுமியின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முனு்பு எதிர்பாரத விதமாக உயிரிழந்த நிலையில், அந்த சிறுமி தற்போது வரை அவரது தந்தையான 44 வயதான கோவிந்தன் அரவணைப்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தான், அந்த சிறுமி அங்குள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு வரை படித்து முடித்த நிலையில், மேற்கொண்டு படிக்க முடியாமல், தனது வீட்டில் இருந்து வந்தார்.

இந்த சூழலில், இந்த சிறுமியின் தந்தை மது போதைக்கு அடியான நிலையில், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார் என்றும், கூறப்படுகிறது.

அப்படியான தருணத்தில், தான் பெற்ற மகள் என்று கூட பாராமல், அவர் மீது சபலப்பட்ட அந்த கொடூர தந்தை, தனது கூட்டாளியான வி.சாத்தனூரை சேர்ந்த 48 வயதான கந்தகோணி என்பவருடன் சேர்ந்து, பெற்ற மகைள மிரட்டியே பலவந்தமாக அவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இப்படி, தந்தையே தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அந்த தந்தையின் கூட்டாளியான ஒருவரும், அந்த 17 வயது சிறுமியை வேட்டையாடி பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

மேலும், “இந்த பாலியல் பலாத்கார சம்பவம் குறித்து, யாரிடமும் எதுவும் வெளியே சொல்லக்கூடாது” என்றும், அவர்கள் அந்த சிறுமியை கடுமையாக மிரட்டி உள்ளனர்.

இதனால், இன்னும் கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, இது குறித்து யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டில் இருந்து வந்திருக்கிறார்.

இந்த சூழிலில் தான், அந்த சிறுமி கருவுற்றுள்ளார். தொடக்கத்தில், தான் கர்ப்பம் அடைந்ததை தெரியாமல் இருந்த அந்த மாணவிக்கு, நாளடைவில் அந்த சிறுமியின் வயிறு போக போக பெரிதாகி உள்ளது.

அப்படியாக, அந்த சிறுமியின் கருவானது தற்போது 8 மாதம் வரை வளர்ந்த நிலையில், அந்த 17 வயதான சிறுமி, தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், சிறுமியைிடம் விசாரித்து உள்ளனர்.

அப்போது, அந்த சிறுமி கூறிய தகவலை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர். 

அதனப்டி, “அந்த சிறுமியை அவரது தந்தை கோவிந்தன் மற்றும் தந்தையின் கூட்டாளியான வி.சாத்தனூரை சேர்ந்த கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக” அந்த சிறுமி கூறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், “சிறுமியின் தந்தையான கோவிந்தன், கந்தகோணி என்கிற முனுசாமி ஆகிய இருவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

தற்போது அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, பெற்ற மகளையே தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சயை ஏற்படுத்தி உள்ளது.