உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி பட விறுவிறுப்பான டீசர்!
By Anand S | Galatta | February 11, 2022 15:00 PM IST
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் நடிகராகவும் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.
முன்னதாக கண்ணை நம்பாதே & ஏஞ்சல் ஆகிய திரைப்படங்களில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குனர் மாரி செல்வராஜ் புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள நெஞ்சுக்கு நீதி படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
நடிகர், பாடலாசிரியர், பாடகர் & இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வரும் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் நெஞ்சுக்கு நீதி படத்திற்கு திபு நினன் தோமஸ் இசை அமைத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க ஆ அர்ஜுனன் சிவானி ராஜசேகர் மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியானது விறுவிறுப்பான அந்த டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.