கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிக்கிலோனா. இந்த படத்தில் யோகி பாபு, அனகா, ஷிரின், ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். 

படப்பிடிப்பு அனைத்துமே முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் படக்குழுவினர். 3 கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சந்தானம். கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான டிக்கிலோனா படத்தின் ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்தது. டைம் ட்ராவல் செய்து தனது திருமணத்தை நிறுத்த போவது போல் காட்சிகள் அமைந்துள்ளது. 

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் சைக்கிள் வீல போல பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஜிதின் ராஜ் பாடிய இந்த பாடல் வரிகளை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ளார். மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் கணவன் புலம்புவது போல் அமைந்துள்ளது இந்த பாடல். ஷெரிஃப் இந்த பாடலுக்கு கோரியோக்ராஃப் செய்துள்ளார்.  

ஜான்சன் இயக்கத்தில் உருவாகி வந்த பாரிஸ் ஜெயராஜ் படத்தின் படபிடிப்பை முடித்தார் சந்தானம். படத்தின் இரண்டு லுக் கொண்ட போஸ்டர்கள் வெளியானதால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர் சந்தானம் ரசிகர்கள். பாரிஸ் ஜெயராஜ் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். 

கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். கடந்த வாரம் இந்த படத்தின் டப்பிங் பணிகளை துவங்கினார் சந்தானம். படப்பிடிப்பு ஒரு புறம் நடக்க, தான் நடித்த காட்சிகள் வரை டப்பிங் செய்துள்ளார். படத்தில் சந்தானம் கானா பாடகர் என்று கூறப்படுகிறது.