ஜனவரியில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் நடிகர் ரஜினிகாந்த. முதற்கட்டமாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்திருந்தார். 


இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் ரஜினி பொதுவாக பயன்படுத்தும் 'பாபா முத்திரை' சின்னத்தை ஒதுக்கும்படியும், அது இல்லாதபட்சத்தின் அவரின் 'பாட்ஷா' திரைப்படத்தை நினைவுப்படுத்தும் 'ஆட்டோ' சின்னத்தை ஒதுக்கும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

இதையொட்டி தேர்தல் ஆணையம் ‘’பாபா முத்திரையை ‘’ மறுத்துவிட்டு, ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தை தற்போது ஒதுக்கி உள்ளது.


மேலும், தமிழகத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்த ’மக்கள் சேவைக் கட்சி'யே பயன்படுத்தி இருக்கிறார். இந்த ‘மக்கள் சேவைக் கட்சி’யானது தேர்தல் ஆணையத்தில் 2018ம் ஆண்டு 'அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்' எனும் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையத்தின் மூலமாகவே 'மக்கள் சேவை கட்சி' என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை எர்ணாவூரில் இருந்து இக்கட்சி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஸ்டாலின் பெயரில் கட்சி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 


மக்கள் சேவை கட்சியில் இருந்து தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிடம் இருந்து போட்டியிட ஏதுவாக ’பாபா முத்திரை’ அல்லது ‘ஆட்டோ’ சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணைத்திடம் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் மக்கள் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. 


கட்சி ஆரம்பிக்கும் முடிவுடனே வேறு சிலர் மூலம் முதலில் அவர்கள் பெயரில் ஒரு கட்சியை பதிவு செய்ய வைத்துவிட்டு, ஜனவரியில் அதிகாரபூர்வமாக இந்தக் கட்சியின் பெயரை மக்களுக்கு அறிவிக்க இருந்தார் ரஜினி.