தமிழ் திரை உலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார். தனது முதல் படமாக ஆதித்ய வர்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் துருவ் விக்ரம்.

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவந்த ஆதித்ய வர்மா திரைப்படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த துருவ் விக்ரம் தனது 2வது படத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்த திரைப்படம் மகான்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த மகான் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, துருவ் விக்ரமின் நடிப்பும் அனைவரையும் கவனிக்க வைத்தது. அடுத்ததாக பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமனிதன் ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் துருவ் விக்ரம் நடிக்க உள்ளார்.

இதனிடையே நேற்று அக்டோபர் 16ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் துருவ் விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் பேசிய, “இந்த கல்லும் பாட்டும் ரத்தமும் போர்க்களமும்” என்ற வசனத்தை கல்லூரி மாணவ மாணவிகள் முன்பு பேசி அரங்கையே அதிர வைத்தார். துருவ் விக்ரம் பேசிய அந்த வீடியோ இதோ…
 

Dhruv Vikram making it bigger in stage with @chiyaan’s #AdithaKarikalan signature dialogues. pic.twitter.com/TauStUzhnr

— Venkatramanan (@VenkatRamanan_) October 16, 2022