தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு ரிலீசாக உள்ள திரைப்படம் சர்தார். அசத்தலான பல கெட்டப்களில் இரட்டை வேடங்களில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படமும், இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்க தயாராகும் ஜவான் திரைப்படமும் ஒரே கதை என தற்போது சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

ஷாருக்கானுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இணைந்து நடிக்கும் ஜவான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கார்த்தியின் சர்தார் படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் கார்த்தியின் சர்தார் திரைப்படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது இந்த நிலையில் கார்த்தியின் சர்தார் திரைப்படமும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படமும் ஒரே கதைதான் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படத்தொகுப்பாளர் ரூபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். இரண்டு திரைப்படங்களின் கதைகளும் ஒன்றுதான் என கூறப்படும் அந்த ட்வீட்டை குறிப்பிட்டு, “கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது… ஆனால் எனக்கு இது பிடித்திருக்கிறது” என அதனை மறுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். படத்தொகுப்பாளர் ரூபனின் அந்த பதிவு இதோ…
 

Oh my Good God?! 😫
How can this happen to me?!😭@Chrissuccess But i always loved ur confidence bro🤭#ishtathukku https://t.co/hZAccvE1AM

— Editor Ruben (@AntonyLRuben) October 14, 2022