பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோக்களில் ஒருவராகவும் இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் அஜித் குமார் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதிரடியான ஸ்டன்ட் காட்சிகள் நிறைந்த ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக வெளிவந்த வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் துணிவு.

தனது முதல் இரண்டு திரைப்படங்களான சதுரங்கவேட்டை & தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களிலேயே ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்களது கூட்டணியில் தயாராகியுள்ள துணிவு திரைப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார்.

அஜித் குமாருடன் இணைந்து முன்னணி மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி & ராஜதந்திரம் வீரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் துணிவு படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் துணிவு படத்திற்கு சுப்ரீம் சுந்தர் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து தாய்லாந்தில் தனது பைக் ரைடிங்கிலும் ஈடுபட்ட அஜித் குமார் தற்போது சென்னை திரும்பியுள்ளார். துணிவு படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய அஜித்குமாரின் விமான நிலைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோ இதோ…
 

This is How he Responds to fans !!

A man with Golden Heart ❤️ Thala #Ajithkumar sir #Thunivu pic.twitter.com/HseV7SyL56

— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) October 17, 2022

That Police Sir Voice : சீக்கிரம் வழி விடுங்க ,தல வர்றாரு !! #Thunivu pic.twitter.com/2qccU8EeN3

— 🔥 Ajith Kumar🔥 (@Anythingf4AJITH) October 17, 2022