மலையாள திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து அசத்தலான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ப்ரித்விராஜ் KGF படத்தின் இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் சலார் திரைப்படத்தில் வரதராஜ மன்னார் எனும் மிரட்டலான கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து KGF படத்தின் தயாரிப்பு நிறுவனமான நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் டைசன் திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.

முன்னதாக மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ப்ரித்விராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் கோல்ட் திரைப்படம் அடுத்த ஆண்டு(2023) ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இயக்குனர் ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடித்துள்ள காப்ப திரைப்படமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் அட்வென்ச்சர் திரைப்படமாக தயாராகும் ஆடுஜீவிதம் திரைப்படத்திலும் பிரித்திவிராஜ் நடித்துவருகிறார். இத்திரைப்படத்திற்கு இசைப்புயல்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல மலையாள இயக்குனர் வைசாக் இயக்கத்தில் ப்ரித்விராஜ் நடிக்கவுள்ள திரைப்படம் கலீஃபா.

ஜினு ஆபிரஹாம் இன்னோவேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜினு V ஆப்ரஹாம் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரிக்கும் கலீஃபா படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார்.  இந்நிலையில் ப்ரித்விராஜின் பிறந்த நாளான இன்று கலிஃபா திரைப்படத்தை அறிவிக்கும் வகையில் அட்டகாசமான அறிவிப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர் அந்த போஸ்டர் இதோ…
 

Vengeance will be written in GOLD!

Announcing #KHALIFA!

Directed by #Vysakh#JinuVAbhraham #dolwinkuriakose @saregamaglobal @YoodleeFilms @saregamasouth #SahilSharma @sathyaDP #ShameerMuhammed @JxBe #shajienaduvil @poffactio pic.twitter.com/GZDhrVKw7Z

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) October 16, 2022